எம்எல்ஏக்கள் என்ன வேலூர் சிறைக் கைதியா… சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசம்

எம்எல்ஏக்கள் என்ன வேலூர் சிறைக் கைதியா என்று சட்டசபையில் ஸ்டாலின் ஆவேசமாக பேசினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தனது பலத்தை இன்று நிரூபிக்க சட்டசபை கூடியுள்ளது. இதில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் கார் சோதனை செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், சட்டசபை கூடிய பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், வேலூர் சிறைக் கைதிகள் போல் எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் போலீசாரால் அழைத்து வருப்பட்டனர் என்று குற்றம் சாட்டினார். எம்எல்ஏக்கள் என்ன சிறைக் கைதிகளா என்றும் கேள்வி எழுப்பினார்.

Are MLAs prisoners asks M. K. Stalin in assembly

இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு கொறடா என அறிவிக்கப்பட்ட செம்மலை பேச வேண்டும் என்ற கோரிக்கை சட்டசபையில் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இந்தக் கடும் கூச்சல் குழப்பத்திற்கு நடுவே எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான தீர்மானத்தை முன்மொழித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+