அட்சய திருதியைக்கு பிறகும் தங்கம் வாங்க போறீங்களா ? இதுதான் சரியான நேரம்! விலை நிலவரம் தெரியுமா?
சென்னை: தங்கம், வெள்ளி நகைகளை வாங்க செல்வதற்கு முன்பு அதன் விலையை தெரிந்து கொள்ளுங்கள்.
பொன் நகையைவிட உந்தன் புன்னகையே போதும்.. இதை கேட்டு கேட்டு காதுகள் புளித்துவிட்டனவா? பொன் நகையை விட அழகாக ஜொலிக்கும் கவரிங் நகைகள் எத்தனை வந்துவிட்டாலும் மண் மீதும் பொன் மீதும் போட்ட காசு சோரம் போனதாக சரித்திரம் இல்லை என்பார்கள்.
அதனால்தான் ஒரு குண்டு மணி தங்கம் வாங்கினாலும் அதனால் நமக்கு இன்றில்லாவிட்டாலும் என்றாவது பலன் கிட்டும். ஆகவேதான் தங்க நகையை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களின் ஆர்வத்தை வியாபாரிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.

அட்சய திருதியை நன்னாளில் தங்கம் வாங்கினால் சுபிட்சம் என நகைக் கடைக்காரர்கள் விளம்பரத்திற்காக கொண்டு வந்தது என சிலர் கூறுகிறார்கள். ஆனால் பலர் அன்றைய தினம் தங்கம் வாங்கினால் அடுத்த ஆண்டுக்குள் அந்த நகையை விட சற்று கூடுதலாக வாங்க முடிகிறது. இதை கண்கூடவே பார்த்துள்ளோம் என்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை அன்று நகைக் கடைகள் கவர்ச்சிகரமான விளம்பரத்தை முன் வைத்து தங்கள் வியாபாரத்தை செய்து வருகிறார்கள். அட்சய திருதியை அன்று அதிகாலையே நகைக் கடைகள் திறக்கப்படுகின்றன. மேலும் அன்றைய தினம் தங்கம் வாங்கினால் வெள்ளி இலவசம், செய்கூலி, சேதாரம் இல்லை உள்ளிட்ட விளம்பரங்கள் மக்களை கவரத்தான் செய்கின்றன.
அன்றைய தினம் ஒரு மூக்குத்தி வாங்கிவிட்டு பில் போட இரவு வரை வரிசையில் காத்திருக்கும் சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. அட்சய திருதியையை முன்னிட்டு தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இதனால் மக்கள் தங்கத்தை வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள். தற்போது மீண்டும் ரூ 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது ஒரு சவரன் தங்கத்தின் விலை!

நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ 64 அதிகரித்த நிலையில் இன்றும் அதே விலையே நீடிக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் 5,630 ரூபாயாகவும் ஒரு சவரன் தங்கம் ரூ. 45,040 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ 4,612 ஆகவும் ஒரு சவரன் ரூ. 36,896 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலை மட்டும் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 80.20 எனவும் ஒரு கிலோ வெள்ளி ரூ 80,200 க்கும் விற்பனையாகிறது.
-
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
தங்கம் விலை தொடர் உயர்வா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாஸ்.. கெவின் வார்ஷ் முடிவில் தான் எல்லாமே இருக்கு! -
இந்தியாவில் வெள்ளி இறக்குமதி 87% அதிரடி வீழ்ச்சி.. நகை விலை உயர்வு.. இனி சிக்கல் மேல் சிக்கல்! -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications