“ஊரே வரும்னு நினைச்சோம்… ஆனா, ஒரு ஈ,காக்கா கூட வரலை” – சோகமாய் முடிந்த கருவுடைச்சேரி தேர்தல்
அரியலூர்: அரியலூர் அருகே ஒரு வாக்குகூட பதிவாகாத வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர்கள் வழிமேல் விழிவைத்து வாக்காளர்களுக்காக காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கருவுடைசேரியில் மக்கள் ஒட்டு மொத்தமாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் அங்கு உள்ள வாக்கு சாவடியில் இது வரை ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.
அரியலூர் ஒன்றியம் மேல கருப்பூர் ஊராட்சியில் கருவுடைசேரி கிராமம் உள்ளது. இங்கு ஆண் வாக்காளர்கள் 475 பேரும் பெண் வாக்காளர்கள் 460 பேரும் மொத்தம் 935 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த ஊரில் உள்ள புறம்போக்கு நிலம் 4 ஏக்கரை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தனது குடும்பத்தினர் பெயரில் பட்டா போட்டு விட்டதாகவும், அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து கருவுடைசேரி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர்.
ஆனால் இதுவரை நிலத்தை மீட்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிக்க இக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதன்படி கருவுடைசேரி கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடிக்கு இன்று காலை முதல் யாரும் வாக்களிக்க செல்லவில்லை. இதனால் இன்று மதியம் 1 மணிக்கு மேலும் கூட இந்த வாக்குசாவடியில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.
இந்த வாக்குச்சாவடிக்கு பணிக்கு வந்த தேர்தல் அலுவலர்கள் ஒருவராவது வாக்களிக்க வரமாட்டார்களா என ஏக்கத்துடன் வாக்குச் சாவடிக்குள் அமர்ந்திருந்தனர். ஒட்டு மொத்தமாக கிராமமே தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.தேர்தல் முடியும் தருவாயின் கடைசி நிமிடத்தில் கூட யாரும் வரவில்லை வாக்குப்பதிவு செய்ய என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications