சசிகலா புஷ்பாவைக் கைது செய்யுங்கள்.. திருச்சி போலீஸில் அதிமுக புகார்!
திருச்சி: முதல்வர் ஜெயலலிதா குறித்து அவரது மாண்பைக் குலைக்கும் வகையில் ராஜ்யசபாவில் பேசிய எம்.பி. சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது.
இந்தப் புகாரை அதிமுக வழக்கறிஞரும், பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவருமான பாண்டியன் சார்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி இன்று திருச்சி போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகணனிடம் நேரில் கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பாண்டியன் பேசுகையில், தன்னை முதல்வர் தாக்கியதாக நாடாளுமன்றத்தில் போய் பேசியிருக்கிறார் சசிகலா. அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் இதுபற்றி புகார் அளித்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல், நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வரின் மாண்பை குறைக்கும் வகையில், திட்டமிட்டு அவதூறு பேசியுள்ளார்.
முதல்வர் தன்னை தாக்கியதாகவும், ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும் அவர் வாய்மொழியாக மட்டுமே சொல்கிறார். இதற்கு அவரிடம் சாட்சியங்கள் இல்லை. இப்படி ஆதாரம் இல்லாமல் தமிழக முதல்வர் மீது குற்றஞ்சாட்டியதற்காக சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்துள்ளோம். சட்ட நடவடிக்கைகள் எடுக்க 20 நாட்கள் காத்திருப்போம். இல்லையெனில் அவர் மீது நீதிமன்றத்தின் மூலம் வழக்கு தொடருவோம் என்றார் பாண்டியன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications