அவதூறு வழக்கு: ஆஜராகாத விஜயகாந்துக்கு விழுப்புரம் கோர்ட் பிடிவாரண்ட்!

தமிழகம் முழுவதும் விஜயகாந்துக்கு எதிராக பல நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது. இதில் சிலவற்றில் விஜயகாந்த் நேரில் ஆஜராகி வருகிறார். ஆஜராகாத நீதிமன்றங்கள் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் செய்கின்றனர்.
இதேபோல் 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பேசிய விஜயகாந்த், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினார் என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 26-ந் தேதி மட்டும் விஜயகாந்த் நேரில் ஆஜராகி இருந்தார்.
பின்னர் நடைபெற்ற தொடர் விசாரணைகளின் போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. கடந்த 6-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போதும் விஜயகாந்த் ஆஜராகவில்லை. அப்போது அடுத்த விசாரணைக்கு விஜயகாந்த் வரவில்லை எனில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கிருஷ்ணமூர்த்தி எச்சரித்திருந்தார்.
இதனிடையே இன்று இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் அலுவல்கள் இருப்பதால் விஜயகாந்த் ஆஜராக இயலவில்லை என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 7-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications