அடியாத்தீ... புருஷனுக்கே தெரியாம அதிமுகவில் போய் சேர்ந்துட்டாராமே ஆர்த்தி!
சென்னை: டிவி பிளஸ் சினிமா நடிகை ஆர்த்தி அதிமுகவில் சேர்ந்தது அவரது கணவர் கணேஷ்கருக்கே தெரியாதாம். சேர்ந்த பிறகுதான் பேப்பர்களில் புகைப்படம் வெளியாகி, நியூஸ் எல்லாம் வெளியாகி, அதைப் பார்த்துத்தான் அறிந்து கொண்டாராம்.. இதை ஆர்த்தியே மனம் திறந்து கூறியுள்ளார்.
மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கும்போது சவ்வு மிட்டாய் சாப்பிடுவதறகும், கடை கடையாய் போய் காதுக்கு கிளிப், விதம் விதமான பொருட்கள் வாங்குவதற்கும், தமுக்கம் மைதானத்தில் போய் பொருட்காட்சி பார்ப்பதற்கும் ஒரு கூட்டமாக கிளம்பிப் போய் மகிழ்வார்கள் மக்கள்.
அதே மாதிரி இப்போது அதிமுகவில் போய்ச் சேருவதற்கு ஒரு கூட்டமே குறிப்பாக நடிக, நடிகையர் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த அலைமோதல் தேர்தலுக்குத் தேர்தல் மாறுபடும். திமுக ஆட்சியில் இருந்தால் அங்கு போய் விழுவார்கள். அதிமுக ஆட்சியில் இருந்தால் அங்கே போய் சேருவார்கள்..
அந்த வகையில் லேட்டஸ்டாக அதிமுக கரைவேட்டி சேலைக்கு மாறியவர்தான் நடிகை ஆர்த்தி. இவர் தான் ஏன் அதிமுகவில் சேர்ந்தேன் என்பது குறித்து விளக்கியுள்ளார் விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில்.

அம்மா.. ஐ லவ் யூ..
பர்சனலாகவே ஜெயலலிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தனையோ நல்ல திட்டங்கள் அம்மா ஆட்சியில் இருக்கு. அப்படிப்பட்ட கட்சியில் நானும் கண்டிப்பா இருக்கணும்னு உடனே சேர்ந்துட்டேன். மக்களை மட்டுமே நம்புகிற அ.தி.மு.க-வைத் தவிர, மத்த எல்லாக் கட்சிகளுமே கூட்டணியை நம்பித்தான் இருக்காங்க. கூட்டணி அமைச்சுப் போட்டியிடுறது எனக்குப் பிடிக்காது.

கலந்துக்கிட்டவதான் நான்
சன் டிவி-யிலேயும் கலைஞர் தொலைக்காட்சியிலேயும் சில நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டவதான் நான்.

ஆனா அனுப்பிச்சாட்டங்களே..
கலைஞர் டி.வி-யில தீராத விளையாட்டுங்கிற என் நிகழ்ச்சி ஆடியன்ஸ்கிட்ட நல்ல ரீச்ல இருந்தப்போ, உங்க நிகழ்ச்சியால எங்களுக்கு நஷ்டம்தான்னு சொல்லி, அவங்களாதான் என்னை வெளியே அனுப்பினாங்க. ஆனா, இந்தக் காரணத்துக்காக நான் அதிமுகவில் சேரலை.''

இப்பவும் நான் நடிகைதாங்க...
இப்பவும் நான் ஒரு நடிகைதாங்க. சினிமாவில் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஜெயலலிதாவோட நிர்வாகத் திறமை, ஆட்சி செய்கிற விதம், அவங்களோட தைரியம், தன்னம்பிக்கை... இதையெல்லாம் பார்த்துதான் நான் அ.தி.மு.க-வில் இணைஞ்சிருக்கேன். மத்தபடி முழுநேரமா அரசியல்ல மட்டுமே இருக்கணும்னு நான் ஆசைப்படவே இல்லை. இதுதான் உண்மை.

திமுகவால கெடவில்லையே வடிவேலு
அதே மாதிரி வடிவேலு பிரசாரம் செஞ்ச சமயத்துல, புதுப்படங்கள் எதையும் கமிட் பண்ணிக்கலை. அதனாலதான் அடுத்தடுத்த வாய்ப்புகள்ல அவருக்கு இடைவெளி இருந்துச்சே தவிர, திமுகவுக்கு ஆதரவா பிரசாரம் பண்ணியதாலதான் வாய்ப்புகள் கிடைக்கலைங்கிறதை என்னால ஏத்துக்க முடியலை.

ஹயோ.. ஆல் தி பெஸ்ட் சொன்னார் கணேஷ்கர்...
நான் அதிமுகவுல சேர்ந்த விஷயம், போட்டோவோட பேப்பர்ல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டார என் வீட்டுக்காரர். 'எனிவே ஆல் தி பெஸ்ட்' னு சொன்னார் என்று கூறி கன்னத்தில் குழி விழ சிரித்தார் ஆர்த்தி...
யார் தலையிலும் இடி விழாம இருந்தா சரித்தான்...!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications