சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Recommended Video
உலக பிரசித்தி பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சக்கரவர்த்தி தீட்சிதர் கொடியேற்ற திருவிழாவை துவக்கி வைத்தார்.

குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் கொடியேற்ற விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். வருகிற 19ம் தேதி தேரோட்டமும், 20-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் என கோயில் தீட்சிதர்கள் அறிவித்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக தேரோட்டத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும், அனைத்து நிகழ்ச்சிகளையும் பக்தர்கள் இன்றி கோவிலுக்குள்ளேயே நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் வருவாய்த்துறை, காவல்துறை தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications