சாட்சிகளை குறுக்கு விசாரணை... சசிகலா தரப்பின் கோரிக்கையை நிராகரித்தது ஆறுமுகசாமி கமிஷன்
ஜெயலலிதா மரண விவகாரத்தில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்பினர் முன்வைத்த கோரிக்கையை ஆறுமுகசாமி கமிஷன் நிராகரித்தது.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முன்வைத்த கோரிக்கையை ஆறுமுகசாமி நிராகரித்தார்.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.

அப்பல்லோ மருத்துவர்கள்
முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகன் ராவ் , அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் என 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

ஆறுமுகசாமியிடமே கேள்வி கேட்ட சசி
இந்நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த சம்மன் இமெயிலில் அனுப்பப்பட்டது. சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் தன் மீது புகார் கொடுத்தவர் யார் என்பதை தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.

மற்றொரு கோரிக்கை நிராகரிப்பு
அதற்கு ஆறுமுகசாமியும் ஒப்புக் கொண்டது. இந்நிலையில் அனைவரையும் விசாரித்த பின் கடைசியில் குறுக்கு விசாரணை செய்ய ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.

20 பேரிடம் விசாரணை
அதை ஆறுமுகசாமி ஏற்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில் அனைத்து சாட்சிகளையும் விசாரித்த பின் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க இயலாது. இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வழக்கு முடிய 15 ஆண்டுகள்
அனைவரையும் விசாரித்த பின் கடைசியில் குறுக்கு விசாரணை செய்தால் வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகும். இனி வரும் நாட்களில் வேண்டுமானால் விசாரணைக்கு வருபவர்களை விசாரிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications