சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் கோடிகளில் பணம் பதுக்கிய செய்யாதுரை.. பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்
சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை சென்னை அண்ணா மேம்பாலத்தில் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை சென்னை அண்ணா மேம்பாலத்தில் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாலத்தின் கீழே ரகசிய இடத்தில் அவர் பணத்தை பதுக்கி வைத்து இருந்துள்ளார்.
கிறிஸ்டி நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையை தொடர்ந்து, தற்போது எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
இவரின் குடும்ப நிறுவனமான எஸ்பிகே என்ற கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனம் தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் செய்த சில பணிகளில், முறைகேடுகள் செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து இந்த சோதனை நடக்கிறது.

எவ்வளவு பணம்
இதுவரை 105 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இதுவரை 180 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இன்று செய்யாதுரைக்கு சொந்தமான மர்ம பங்களாவில் ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இதில் இன்னும் சில முக்கியமான ஆவணங்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது 30க்கும் மேற்பட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடக்கிறது.

மீண்டும் ஏன் தொடங்கினார்கள்
இந்த நிலையில்தான்,இன்னும் பல மடங்கு பணம் வெளியே பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அப்போதே அண்ணா மேம்பாலம் குறித்து அதிகாரிகளுக்கு புகார் வந்து இருக்கிறது. இதனால் இரண்டாவது நாளோடு நிறுத்தப்பட்ட வருமான வரி சோதனை மீண்டும் தொடங்கப்பட்டது.

இருந்தது
இந்த நிலையில்தான் சென்னை அண்ணா மேம்பாலத்தின் கீழ் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் செய்யாதுரை பணம் பதுக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரகசிய இடத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. ரூ.4 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

ஆச்சர்யம்
தி நகரில் இருந்து வரும் பாலமும், தேனாம்பேட்டையில் இருந்து வரும் பாலமும் இணையும் இடத்தின் அடிப்பகுதியில் இப்படி பணத்தை பதுக்கி வைத்து இருக்கிறார்கள். அந்த இடத்திற்கு அருகே போலீஸ் நிலையமும், அமெரிக்க தூதரகமும் இருக்கிறது. அதேபோல் நெடுஞ்சாலை துறை கட்டிடமும் இருக்கிறது. இவ்வளவு பாதுகாப்பிற்கு இடையில் இந்த பண பதுக்கல் நடந்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications