சரிந்தது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி: 2010-11ல் 13.12%; 2012-13ல் 4.14%!!
சென்னை: 2012-13ஆம் ஆண்டில் நாட்டிலேயே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிதான் மிகக் குறைவாக 4.14% ஆக இருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 4.9% ஐ விட குறைவாகும்.
தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2014-15ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்தின் பொருளாதார நிலைமை குறித்து கூறுகையில்,
சரிநிகர் வளர்ச்சியை எட்ட மாநில அரசு கடுமையாக முயன்று வரும் அதே வேளையில் வளர்ச்சியைத் தூண்டவும், நலிவுற்று வரும் பேரியல் பொருளாதாரச் சூழ்நிலைகளை மேம்படுத்தவும், மத்திய அரசு தவறியதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியும், முதலீடுகளும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

2013-14ல் 5% பொருளாதார வளர்ச்சி?
தொடரும் பொருளாதார மந்த நிலையால் மாநில வரி வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கியத் துறைகளில் அரசின் முதலீடுகளைக் குறைக்காமல் தமிழ்நாடு நிதி பொறுப்புடைமைச் சட்ட குறியீடுகளைக் கடை பிடிப்பதும் மிகவும் கடினமான சவாலாக அமைந்துள்ளது. 2013-2014 ஆம் ஆண்டு மாநிலப் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதத்திற்கு கூடுதலாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை மாறுவதற்கான சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன என்றார்.

தமிழகத்தின் பொருளாதார நிலைமை இதுதான்..
ஓ. பன்னீர்செல்வம் சொல்வது போல தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின் தங்கிப்போய்தான் உள்ளது. திட்டக் கமிஷன் தெரிவிக்கும் புள்ளிவிவரங்களைப் பாருங்கள்..

2010-11ல் 13.12%
திட்டக் கமிஷனின் புள்ளி விவரப்படி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியானது 2009-10ஆம் ஆண்டில் 13.12% ஆக இருந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் இது 10.8% ஆக இருந்திருக்கிறது.

2011-12ல் 7.42%
இது அடுத்த ஆண்டில் அப்படி குறைந்துபோய் ஒற்றை இலக்கத்தை தொட்டுவிட்டது. 2010-11ஆம் ஆண்டில் வெறும் 7.42% ஆகத்தான் இருந்தது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி.

2012-13ல் 4.14%
அதற்கு அடுத்த ஆண்டு இன்னும் மிக மோசமாகிப் போய் வெறும் 4.14% சதவீத பொருளாதார வளர்ச்சியைத்தான் கண்டது தமிழகம். அதுவும் நாட்டிலேயே மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக சுருங்கிப் போனது.

உள்நாட்டு உற்பத்தியைவிட குறைவு
அதுவும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4.9%விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மின்வெட்டுதான் முதன்மை காரணம்..
இதற்கு முதன்மையாக காரணம் மின்வெட்டு நிலைமையை மாநில அரசு சரியாக கையாளாமல் விட்டதுதான் என்கின்றனர் திட்டக் குழு அதிகாரிகள்..

ஐந்து சதவீதம்..
இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதைப் போல, 2013-14ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எட்டுமா தமிழகம் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications