Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்

பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்-வீடியோ

    விருதுநகர்: பேராசிரியர்கள் கேட்டதால் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சர்ச்சைக்குள்ளான பேராசிரியை நிர்மலா தேவி தெரிவித்துள்ளார்.

    மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கைதான அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான சூப்பிரண்டு ராஜேஸ்வரி, உதவி அதிகாரியான துணை சூப்பிரண்டு சாஜிதா பேகம் ஆகியோர், பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த விசாரணை நடந்தது.

    ஆசை வார்த்தை கூறி தூண்டினர்

    ஆசை வார்த்தை கூறி தூண்டினர்

    அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி மவுனமாகவே இருந்துள்ளார். மாணவிகளிடம் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசினீர்கள் என கேட்டபோது, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் கருப்பசாமி, முருகன் ஆகியோர் தான் ஆசை வார்த்தை கூறி தன்னை தூண்டியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

    விசாரணைக்கு பிறகே

    விசாரணைக்கு பிறகே

    அவரது வாக்குமூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். இதனிடையே பேராசிரியை நிர்மலா தேவியிடம் முழுமையாக விசாரணை நடத்திய பிறகே, வழக்கின் முழு விவரம், அதில் தொடர்புடையவர்கள் பற்றி தெரியவரும் என சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    யாருடன் தொடர்பு உள்ளது?

    யாருடன் தொடர்பு உள்ளது?

    அவர் பல்கலைக்கழகம் வந்து சென்றபோது பதிவு ,செய்யப்பட்ட சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை சேகரித்து வருகிறோம் என்றும் அந்த அதிகாரி கூறினார். பேராசிரியை நிர்மலா தேவிக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றும் சிபிசிஐடி அதிகாரி கூறினார்.

    மதுரைக்கு அழைத்து செல்ல

    மதுரைக்கு அழைத்து செல்ல

    பேராசிரியை நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக இன்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மதுரை அழைத்துச் செல்ல இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+