சட்டசபையில் முதல்வர் என்னைப்பார்த்து சிரித்து விட வேண்டாம் - ஸ்டாலின்
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னை பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தற்போது அமைந்துள்ள ஆட்சி மக்களுக்கு விரோதமான ஆட்சி என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளா் சசிகலா சமீபத்தில் பேட்டியளித்த போது, எதிர்கட்சித்தலைவரும் முதல்வரும் சட்டசபையில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், சிரித்துக்கொண்டனர் இதன் மூலம் அவர் அதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறினார்.
சட்டசபையில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டதற்கு பதவி பறிக்கப்பட்டது. இதேபோல புதிய முதல்வருக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிரிப்புதான் வித்தியாசம்
இதற்கு பதில் சொன்ன ஓ.பன்னீர் செல்வம், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம் சிரிப்புதான். மனிதர்கள்தான் சிரிப்பார்கள். மிருகங்களுக்கு சிரிக்கத் தெரியாது என்று கூறினார். 10 நாட்கள் நடந்த அரசியல் கலவரங்களுக்குப் பிறகு நேற்று புதிய அமைச்சரவை அமைந்துள்ளது. சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

மக்கள் விரோத ஆட்சி
இது குறித்து சென்னை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது அமைந்துள்ள ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் என்னைப் பார்த்து சிரிக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் முதல்வர் பதவியில் அவர் நீடிப்பார் என்றார்.

ஹேட்ரிக் சாதனை
முன்னதாக ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் 2016ஆம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகான ஒன்பது மாதங்களுக்குள் இதுவரை தமிழகம் காணாத வகையில் மூன்றாவது முதலமைச்சரை அதிமுக சட்டமன்றக் கட்சி தேர்வு செய்து ஒரு விநோதமான "ஹேட்ரிக்" சாதனை செய்திருக்கிறது.

மக்கள் நலன்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெங்களூர் ஜெயிலுக்கு சென்று ஆலோசனைகள் கேட்டு ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப் பட்டுக் கொண்டு இருக்காமல், அரசியல் சட்டப்படி எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிக்கும் ரகசிய காப்பு பிரமாணத்திற்கும் பாதகம் வராமல், பெங்களூரிலும், இங்கேயும் உள்ள அதிகார மையங்களின் ஆசைக்கேற்ற "ஆட்டுவித்தலுக்கு" ஏற்றார் போல் ஆட்சியை நடத்தாமல், முதலமைச்சருக்குரிய பொறுப்புகளையும், கடமைகளையும் முழுதும் உணர்ந்து தமிழக மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஆட்சி நடத்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது என்னைப்பார்த்து முதல்வர் சிரிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications