இப்படியே நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்.. விஜயதாரணிக்கு சபாநாயகர் எச்சரிக்கை
சென்னை: சட்டசபையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் கொறடா விஜயதாரணிக்கு சபாநாயகர் தனபால் எச்சரிக்கை செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவான விஜயதாரணி, டிவி விவாதங்களில் கூட பிறர் பேசும் நேரத்தையும் தனக்கு எடுத்துக் கொண்டு, ஆக்ரோஷமாக பேசக்கூடியவர். சட்டசபையிலும் அவர் துடுக்காக எல்லோர் பேச்சிலும் குறுக்கிடுவது வழக்கம்.

இன்றைய சட்டசபை விவாதத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, விஜயதாரணி அடிக்கடி குறுக்கிட்டு பேசுவதற்கு முயன்றார்.
அமைச்சர் ஒருவர் பதிலுரை வழங்கும்போது யாரும் குறுக்கே பேசக்கூடாது என்ற மரபை சுட்டிக் காட்டி, சட்டசபை தலைவர் தனபால், விஜயதாரணியை கண்டித்தார்.
காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இன்று பேச வாய்ப்பு கிடையாது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், விஜயதரணி சொல்பேச்சு கேட்பதாக இல்லை. மானியக் கோரிக்கையில் பேச வாய்ப்பு கேட்டு தொடர்ந்து கோஷமிட்டபடியே இருந்தார்.
அனுமதி மறுத்த சபாநாயகர், உறுப்பினர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தொடர்ந்து அவைக்கு இடையூறு செய்தால் விஜயதாரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications