Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா ஆவி சசிகலாவை பழிவாங்குமா? பீதி கிளப்பும் ஜோதிடர்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆவி தனது நினைவிடத்தை காவல் காத்து வருவதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாகி வருகிறது. ஜெயலலிதா மறுபிறவி எடுப்பார் என்றும் ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவருடைய உடல் எம்ஜியார் நினைவிட வாளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அவருடைய ஆவி போன்ற உருவம் ஒன்று அந்த நினைவிடத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அழுக்குரல் கேட்பதாக மற்றொரு வதந்தியும் பரவலாக பரவியது.

Astrologers create new panic on Jayalalitha's soul!

இந்த நிலையில் வர்தா புயலின் போது சென்னையே பெரும் பிரச்சனைக்குள்ளான நிலையில் ஜெயலலிதா நினைவிட மேற்கூரைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை.ஜெயலலிதாவின் ஆவி தான் தனது நினைவிடத்தை காப்பதாகவும் அதனால் தான் நினைவிடக்கூரைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று அந்த வதந்தி தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு முறையாக இறுதி சடங்குகள் செய்யப்பட்டவில்லை என்றும் அதனால் தான் அவரது ஆவி, நினைவிடம், போயஸ் இல்லம் போன்றவற்றில் சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பழனியை பூர்வீகமாக கொண்டவர் பிரபல ஜோதிடர் அசோக்ஜி தற்போது ஜெயலலிதா ஆவி சாந்தி அடையவில்லை. கடைசி காலத்தில் தன்னை கேவலப்படுத்தியவர்களை பழிவாங்கும் என்று கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்து மத தர்மப்படி எந்த ஒரு ஆத்மாவும் 3 நாள் கழித்துதான் கர்மாவை சேரும் என்பது விதி.

இந்து மத ஆகம விதிப்படி ஜெயலலிதாவின் குடும்பத்தில் சடங்குகள் செய்யாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அவரது ஆவி அதிதீவிர ஆத்திரத்தோடு இருக்கிறது.

ஜெயலலிதா விரும்பிய வீடு, ஆசைப்பட்டு அணிந்த ஆடைகள், பொருட்கள் இவைகளை யார் எடுத்து கொண்டாலும், பயன்படுத்தினாலும் அது அபகரிப்பாகும்.
அப்படி செய்பவர்களுக்கு நிச்சயம் ஜெயலலிதா சரியான பாடத்தை, தண்டனையை வழங்குவார். அதுபோலவே ஜெயலலிதா ஆவி பூலோகத்தில் 2023 வரை நிச்சயம் இருக்கும். ஜெயலலிதா ஆவி அடுத்த பிறவி எடுக்க இன்னும் 6 வருஷம் ஆகும் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார். இது உண்மையா? பொய்யா தெரியாது ஆனால் ஜெயலலிதா ஆவி பற்றிய வதந்தி தற்போது பரபரப்பை கிளப்பி வருகிறது என்னவே உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+