ஜெயலலிதா ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கு?: இது ஜெயா டிவி லைவ்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்கும் பரபரப்பில் ஊடகங்கள் இருக்க, ஜெயாடிவியில் ஜோதிடர்களை வைத்து இன்றைக்கு ஜெயலலிதாவின் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று லைவ் நிகழ்ச்சி நடத்தினர். இடை இடையே வாக்கு எண்ணிக்கை முடிவுகளையும் அறிவித்தனர்.
தீய சக்தியானது அணி அணியாக இருக்கிறது... தெய்வ சக்தி தனியாக நிற்கிறது. இந்த துன்முகி வருடத்தில் தெய்வ சக்தியானது ஜெயலலிதாவை காக்கும் என்று ஜெயாடிவியில் லைவ் நிகழ்ச்சியில் வந்த ஜோதிடர்கள் கூறினர்.

அரசியல்வாதிகள் அனைவருமே இன்றைக்கு ராசிபலனை பார்த்து விட்டுதான் போயிருப்பார்கள் ஜெயலலிதாவின் சிம்ம ராசி, மகம் நட்சத்திரத்திற்கு இன்றைய பலன் எப்படி இருக்கிறது என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்க, அதற்கு பலன் கூறினார் ஒரு ஜோதிடர்.
ஜெயலலிதாவின் ராசிப்படி லக்னத்திற்கு 6ம் இடத்தில் சனி இருப்பதால் எதிரிகள் நசிந்து போவார்கள். அம்மாவிற்கு வெற்றியே கிடைக்கும் என்றார் ஒரு ஜோதிடர்.
ஜெயலலிதா 25 வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்? அதனால் பலன் கிடைக்குமா என்று கேட்கவே? அதற்கு பதில் சொன்ன ஜோதிடர், கேது என்பது புரட்சிகளை கொடுக்க கூடிய கிரகம். அன்றைய தினம் 7, 2 என்ற அமைப்புப்படி இருக்கிறது. ஏழு மிகவும் ராசியானது சிறப்பான மாற்றத்தை தரும் என்று கூறியுள்ளனர்.
வாஸ்துபடி ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் வெற்றிக்கு சாதகமாக இருக்கிறது என்றும். துன்முகி வருடமானது ஜெயலலிதாவிற்கு சாதகமாகவே இருக்கிறது. நிச்சயம் ஆட்சிமைப்பார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை தக்கவைப்பாரா? இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்து விடும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications