ஓபிஎஸ் ஏன் மனு கொடுத்தார்? - அதிரும் அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக்குழு
சென்னை: கொங்கு மண்டல மக்களின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி கொங்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 'திட்டத்துக்கு முதல்கட்டமாக 250 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், மீண்டும் டெல்லிக்குச் சென்று பன்னீர்செல்வம் மனு கொடுத்திருப்பதுதான் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது' என்கின்றனர் கொங்கு மண்டல அரசியல் கட்சிகள்.
திருப்பூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,516 கோடியில் 30 மாதங்களில் நிறைவேற்றப்படும்' என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை விவசாய சங்கங்களும் பொதுமக்களும் பெரிதும் வரவேற்றனர். இந்த அறிவிப்பின் மூலம் திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் கடந்த 60 ஆண்டு கால கோரிக்கை முடிவுக்கு வந்திருப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த திட்டத்தின் மூலம் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 71 குளங்கள், 630 குட்டைகள் மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்கள், 7 சட்டசபை தொகுதிகள், நூற்றுக்கணக்கான கிராம ஊராட்சிகள் என 50 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் திட்டம் என்பதுதான் பிரதான காரணம்.

குடிநீர் வடிகால் திட்டம்
இதுகுறித்துப் பேசும் அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவின் நிர்வாகிகள், ' பவானி அருகே உள்ள காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து மின் மோட்டார் மூலம், குழாய்களின் வழியாக 3 மாவட்டங்களில் உள்ள ஏரி, குளம் மற்றும் ஏனைய நீர்நிலைகளில் தண்ணீரை நிரப்பும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.
நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டமாக இது அமைய இருக்கிறது.

போர்க்கால அடிப்படை
1957ம் ஆண்டே இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி, முன்னாள் சட்டசபை உறுப்பினர் மாரப்ப கவுண்டர் பேரவையில் பேசினார். ஆனால், இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை யாரும் உணராததால், கொங்கு மண்டல மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவியது. நிலத்தடி நீர்மட்டம் தற்போது இரண்டாயிரம் அடிக்கும் கீழே போய் விட்டது. விவசாயம் பொய்த்து போய்விட்டது. குடிநீருக்கே மக்கள் அவதிப்படுகின்றனர். போர்க்கால அடிப்படையில் திட்டத்தை விரைவாக முடிப்பதன் மூலம், மூன்று தலைமுறைகளாக வறட்சியில் வாடும் மக்களுக்கு இது பயனளிக்கும் என பலகட்டங்களாக போராட்டம் நடந்து வந்தது.

உண்ணாவிரதம்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அவிநாசியில் நடந்தது. போராட்டத் துக்கு ஆதரவாக, அவிநாசி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராமங்களிலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி நடந்த போராட்டத்தில் பத்தாயிரம் பேர் பங்கேற்றனர். இந்தத் திட்டத்தின் முக்கியவத்துவத்தை முதல்வர் நன்கு அறிவார். ஆனால், நடந்து வரும் காட்சிகள் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது" என வேதனையை வெளிப்படுத்தினார்.

பட்ஜெட்டில் நிதி
" ஐம்பது ஆண்டு காலப் போராட்டத்தை உணர்ந்து, ' அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்று ஜெயலலிதா உறுதியளித்தார். தற்போது இந்தத் திட்டத்துக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆளும்கட்சியை வாழ்த்தி விவசாய சங்கங்கள் வாழ்த்து சுவரொட்டிகளை வெளியிட்டனர். ஆனால், இதுவரைக்கும் அவினாசி-அத்திக்கடவு திட்டத்தைத் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கடந்த வாரம் டெல்லியில் பிரதமரை சந்தித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், ' அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்' எனக் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார். இதன் அர்த்தம் என்ன ? திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதியை ஒதுக்கிய தமிழக அரசு, மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருப்பது திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியிருக்கிறது.

மக்கள் காத்திருப்பு
இத்திட்டத்தைப் பற்றிய நிலைப்பாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும்" என்கிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனர் ஈஸ்வரன். ' கொங்கு மண்டல மக்களின் ஜீவாதாரப் பிரச்னையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தேவையை நன்கு அறிந்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. திட்டத்துக்கான தொடக்கவிழாவை விரைவில் நடத்துவார்' என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் கொங்கு மண்டல மக்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications