சென்னையில் ஏ.டி.எம் வாகனத்தைக் கடத்தி ரூ. 26 லட்சம் கொள்ளை: 2 பேர் கைது
சென்னை: சென்னையில் ஏடிஎம் மையத்தில் நிரப்புவதற்கு பணம் கொண்டு சென்ற வாகனத்தைக் கடத்தி 26 லட்ச ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பாரிமுனை அங்கப்பநாயக்கன் தெருவில் வங்கி ஏ.டி.எம். மையங்கள் அதிக அளவில் உள்ளன. அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம்.மில் பணம் நிரப்புவதற்காக அயனாவரத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் வாகனத்தில் பணத்தை கொண்டு சென்றது.

அந்த வாகனத்தில் ரூ.37 லட்சம் பணம் இருந்தது. அங்கப்பநாயக்கன் தெருவை வாகனம் வந்தடைந்ததும், ஏ.டி.எம் மில் செலுத்த பணத்தை பாதுகாப்புடன் எடுத்துச் சென்றனர்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் சுரேந்தர், மற்றும் பாதுகாப்பு நிறுவன ஊழியர் ஆகியோர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பணத்தை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரை ஓட்டி வந்த டிரைவர் நாராயணன் மட்டும் காரில் இருந்தார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. இதனால் கார் சாவியை வண்டியில் வைத்து விட்டு கீழே இறங்கினார்.
திடீரென அங்கு வந்த இருவர் கண் இமைக்கும் நேரத்தில் காரை கடத்திச் சென்றனர். இதை பார்த்து டிரைவர் நாராயணன் கூச்சல் போட்டார். அதற்குள் கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது பற்றி வடக்கு கடற்கரை போலீசில் புகார் அளித்தனர்.
பூக்கடை துணை கமிஷனர் ஜெயக்குமார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அனைத்து காவல் நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டன. கடத்தப்பட்ட காரையும், கொள்ளையர்களையும் தேடிக்கண்டு பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட வாகனம் ராயபுரம் மாதா கோவில் அருகில் நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர் அந்த வாகனத்தில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வாகனத்தைக் கைப்பற்றிய போலீசார் விசாரித்தனர். கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
வாகனத்தின் ஓட்டுநர் நாராயணன் மற்றும் பாதுகாவலர் சுரேந்திரனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நாராயணன் காரில் இருந்து இறங்கி சென்றிருப்பது தெரியவந்தது.
கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பாதுகாப்பு நிறுவன டிரைவரான ராஜேஸ், அவரது நண்பர் லிங்கம் என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ26 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர்.
முதலில் ரூ. 15 லட்சம் பணமே கெள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் காரில் ரூ.26 லட்சம் பணம் இருந்தது தெரியவந்துள்ளது. அந்த பணத்தை ராஜேஸ் கொள்ளையடித்து சென்றுள்ளார். அவரிடமிருந்து பணம் முழுவதும் கைப்பற்றப்பட்டது. அவனது கூட்டாளியான லிங்கம் என்பவரும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications