பட்டா பிரச்சனை.. அரியலூர் துணை தாசில்தாருடன் பெண் வாக்குவாதம்.. உடைத்து எறியப்பட்ட செல்போன்
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ஆம் தேதி பட்டா தொடர்பாக மனு அளித்துள்ளார். சட்டப்படி நோட்டீஸ் வழங்காமல் சில நபர்களின் பெயர்களை அவரது நிலப்பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் அவர் துணை தாசில்தாருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.அப்போது அவரது செல்போன் உடைந்தது. அங்கு நடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
பொதுவாக சொத்து விவகாரங்கள், நிலம் விவகாரங்கள், பட்டா விவகாரங்கள் நீதிமன்றத்தில் இருந்தால், நீதிமன்ற உத்தரவுப்படி தான் விற்க முடியும்.பட்டாவின் உரிமையை மாற்ற முடியும்.அல்லது பட்டாவில் சிலரது பெயரையும் சேர்க்க முடியும்.
நீதிமன்ற வழக்குகள்
இதில் பல்வேறு வகையான சட்ட சிக்கல்கள் பொதுவாகவே இருக்கின்றன. இதனால் தாசில்தார், விஏஓ, சர்வேயர், துணை தாசில்தார், ஆர்ஐ எனயாருமே நீதிமன்ற விவகாரத்தில் சிக்கல் இருந்தால், தலையிட மாட்டார்கள். நீதிமன்ற தீர்ப்பின் படியே செயல்படுவார்கள். இதுதான் நடைமுறை. ஆனால் அரியலூரில் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

அரியலூர் ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி இவர் தற்பொழுது பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார் இந்நிலையில் ஜெயங்கொண்டம் தாலுக்கா அலுவலகத்தில் ரேணுகாதேவி கடந்த 18ஆம் தேதி மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கு சொந்தமான சர்வே எண் 433/11 சார்ந்த நிலத்தில் 50 ஆண்டுகளாக உரிமையுடன் வைத்திருக்கிறோம்.
பட்டா எண்
இதில் நிலத்திற்கு உரிய பட்டா எண் எங்களது பெயரில் நீண்ட காலமாக உள்ளது இந்த நிலம் சம்பந்தமாக தற்போது நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்பும் சட்டப்படி நோட்டீஸும் வழங்காமல் சில நபர்களின் பெயர்களை பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிந்து கொண்டோம் பட்டாவில் சேர்க்கப்பட்டுள்ள பெயர்களை நீக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
துணை தாசில்தாருடன் வாக்குவாதம்
அப்போது நான் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தாசில்தாரிடம் வாக்குவாதம் செய்து தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் ரேணுகா தேவியின் செல்போனை பிடுங்கி உடைத்து எறிந்ததாக கூறப்படுகிறது.
செல்போன் உடைப்பு
இதில் 40 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து ரேணுகாதேவி புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications