அதிமுக பிரமுகர் கார், வீடுகள் மீது தாக்குதல்.. நெல்லையில் பரபரப்பு
நெல்லையில் அதிமுக பிரமுகரை கொல்ல வந்த கும்பல் அவரது மகனை தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை: நெல்லையில் அதிமுக பிரமுகரை கொல்ல வந்த கும்பல் அவரது மகனை தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாரயணத்தை சேர்ந்தவர் நடராஜன். அதிமுக ஜெ பேரவை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் நெல்லை வண்ணார்பேட்டை ராமலிங்கம் தெருவில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் நடராஜன் மாலை அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவரது மகன் மனோஜ், கார் டிரைவர் சந்திரசேகரனிடம் நடராஜனை எங்கே என கேட்டுள்ளனர்.
அவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறவே ஆத்திரமடைந்த கும்பல் மனோஜை தாக்கி விட்டு அவர் கழுத்தில் கிடந்த 12 பவுன் செயினை பறித்து சென்றது. அவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த காரை அரிவாள் மற்றும் இரும்பு கம்பியால் சேதப்படுத்தி விட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.
பின்னர் அங்கு வந்த நடராஜன் பாளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ''நான் கடந்த சில நாட்களாக நடந்து வரும் பல்வேறு இடங்களிலும் பொது கூட்டத்தில் அதிமுகவின் எதிர் கோஷ்டியை எதிர்த்து பேசி வந்தேன். இதனால் டிடிவி ஆதரவாளர்கள் தான் தாக்க வந்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய தொண்டர்களுக்கு நல்ல கருத்துகளை தெரிவிக்க வேண்டும்'' நடராஜன் தெரிவித்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications