நல்லா படிக்கிறானா? மகளுக்காக மாணவனை கொன்ற தாய்..கதிகலங்கிய காரைக்கால்! வீட்டை சூறையாடிய மர்மகும்பல்!
காரைக்கால் : காரைக்காலில் மகளை விட நன்றாக படிப்பதால் ஆத்திரமடைந்து மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் சகாயராணி விக்டோரியாவின் வீட்டை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு நிலவுகிறது.
புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மாலதி. இவர்களது மகன் பாலமணிகண்டன் (13). இவர் கோட்டுசசேரி பாரதி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் படிப்பில் கெட்டிக்காரர். அத்துடன் கலை நிகழ்ச்சியிலும் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

காரைக்காலில் அதிர்ச்சி
பள்ளியில் ஆண்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்து வருகிறது. பாலமணிகண்டன் நேற்றைய தினம் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்குச் சென்றார். அப்போது தனது தாய் மாலதியிடம் பாலமணிகண்டன், எனக்கு பள்ளியில் ஜூஸ் கொடுத்து அனுப்பியது யார் என கேட்டார். நான் அது போல் எந்த ஜூஸையும் கொடுத்து அனுப்பவில்லையே என மாலதி அதிர்ச்சியுடன் சொன்னார்.

மாணவன் மர்ம மரணம்
உடனே பாலமணிகண்டன் 3 முறை வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாலமணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேரடியாக பாலமணிகண்டன் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அதிர்ச்சி பாலமணிகண்டனுடன் படிக்கும் சகமாணவி அருள்மேரியின் தாய் சகாயமேரிதான் பள்ளி காவலாளி தேவதாஸிடம் எதையோ கொடுத்தது தெரியவந்தது.

குளிர்பானத்தில் விஷம்
விசாரணையில் பால மணிகண்டனுடன் படிப்பில் ஏற்பட்ட போட்டி காரணமாக சகாயராணி விக்டோரியா என்பவர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சகாயராணி விக்டோரியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சகாயராணி விக்டோரியா இல்லம் காரைக்காலில் உள்ள வேட்டைக்காரன் வீதியில் அமைந்துள்ள அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

வீடு சூறை
நேற்று நள்ளிரவு வீட்டில் முன்பக்க காம்பவுண்ட் சுவர்கள் மற்றும் கதவுகளை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காரைக்கால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் காரைக்கால் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications