அட்டாக்பாண்டி தேடப்படும் குற்றவாளி- மதுரை மாவட்ட நீதிமன்றம் பிரகடனம்
மதுரை: திமுக நிர்வாகி பொட்டு சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு திமுக நிர்வாகியான அட்டாக்பாண்டி தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை டி.வி.எஸ்.நகரில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி தி.மு.க. செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்தனர். சிலர் சரணடைந்தனர். இவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக வில்லாபுரத்தை சேர்ந்த பாண்டி என்ற அட்டாக் பாண்டி சேர்க்கப்பட்டுள்ளார். இதுநாள் வரை அவர் தலைமறைவாக உள்ளார். பொட்டு சுரேஷ் கொலை வழக்கு மதுரை மாவட்ட 4-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அட்டாக்பாண்டி ஆஜராகாததால் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தும் ஆஜராகவில்லை. இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 22-ந் தேதி வர உள்ளது.
அதற்கு அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திலோ அல்லது ஏதாவது ஒரு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்திலோ சரணடைய வேண்டும் எனவும், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும் மாஜிஸ்திரேட்டு கோவிந்தராஜன் உத்தரவிட்டுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications