பொதுப்பணித்துறை என்ஜீனியரின் மனைவியிடம் நகை பறிக்க முயற்சி..2 பேருக்கு தர்ம அடி.. கைது
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே நடந்து சென்ற கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிக்க முயன்ற வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி சாலை மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவர் பொதுப்பணித்துறையில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேரி மெட்டில்டா. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்லூரி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை மேரி மெட்டில்டா அந்த பகுதியில் உள்ள ஆலயத்திற்கு புறப்பட்டார். வீட்டில் இருந்து ஆலயத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மேரி மெட்டில்டா கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் மேரி மெட்டில்டா நகையை கெட்டியாக பிடித்ததால் மோட்டார் சைக்கிளுடன் வாலிபர்கள் இருவரும் தவறி கீழே விழுந்தனர்.
உடனே மேரி மெட்டில்டா திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அவரது அலறல சத்தம் கேட்டு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து வாலிபர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் பொதுமக்கள் வாலிபர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இருவரையும் சராமரியாக அடி பின்னி எடுத்தனர்.
இதுபற்றி நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபர்கள் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்ட இருவரிடமும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், வாலிபர்கள் இருவரும் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications