மாடு திருட உதவியதாக புகார்- மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை
சேலம்: சேலத்தில் மாடு திருடியதற்கு உடந்தையாக இருந்தார் என்பதாக குற்றச்சாட்டு எழுந்த காரணத்தினால் ஆட்டோ டிரைவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகிலுள்ள கிழக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயியான இவரது தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டப்பட்டிருந்த மாடுகளை மர்ம நபர் ஒருவர் பிடித்து செல்வதைப் பார்த்துள்ளார். உடனடியாக அவர் கூச்சல் போட்டதில் அக்கம் பக்கமிருந்த காட்டுக்காரர்கள் சேர்ந்து மாட்டை பிடித்துக்கொண்டு சென்ற வாலிபரை மடக்கி பிடித்து கட்டிவைத்து விட்டு வாழப்பாடி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபர் குடிபோதையில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் அவர் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் மாடு திருடியதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என சுதாகரை விசாரித்தபோது அவர் வாழப்பாடி மன்னார்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரக்கு ஆட்டோ உரிமையாளரும், டிரைவருமான சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஆட்டோவில் தன்னை இங்கே இறக்கி விட்டு மாடுகளை திருடி வரச்சொன்னதாக சிவக்குமார் போலீசாரிடம் கூறி உள்ளார்.
அப்போது அந்த இடத்துக்கு ஆட்டோவுடன் வந்த சிவக்குமாரும், சுதாகரும் இதுகுறித்து திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்பகுதியில் நின்ற போலீஸ்காரர் ஒருவரும், பொதுமக்களும் அவர்களை சமாதானப்படுத்தினர்.
அந்த நேரத்தில் விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி பயணிகள் ரயில் சென்றது. அப்போது, தனக்கு திருட்டு பட்டம் சுமத்தியதால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் சிவக்குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் அருகில் உள்ள தண்டவாளம் பகுதிக்கு ஓடிச்சென்று ஓடும் ரயில் முன் பாய்ந்தார். இதில் சிவக்குமார் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். தற்கொலை செய்து கொண்ட சிவக்குமாருக்கு கண்மணி என்ற மனைவியும், சரண்யா என்ற மகளும், தனுஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.
மாட்டு திருட்டு சம்பவம் தொடர்பாக வாழப்பாடி போலீசாரும், ஆட்டோ டிரைவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக சேலம் ரயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாடு திருடிய வழக்கில் சுதாகரை வாழப்பாடி போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications