சரக்கு போட்டு சலம்பல்... கண்டித்த ஆட்டோ டிரைவரை சரமாரியாக போட்டுத் தள்ளிய மாணவர்கள்!!
கோவில்பட்டி: மது அருந்திவிட்டு ரகளை செய்ததைக் கண்டித்த ஆட்டோ ஓட்டுநரை வெட்டிப் படுகொலை செய்த 4 மாணவர்களை கோவில்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவில்பட்டி லாயல் மில் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கார்த்திக். ஆட்டோ ஓட்டுநரான இவர் வழக்கம் போல பள்ளி குழந்தைகளை ஏற்றி பள்ளியில் இறக்கி விட்டு கடலையூர் சாலை அருகே சென்று கொண்டிருந்த போது ஒரு மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கோவில்பட்டி மறவர்காலனியை சேர்ந்த சுடலைமுத்து மகன் ராஜா (எ) உலகராஜா, காளிமுத்து மகன் கிருஷ்ணமூர்த்தி, இலுப்பையூரணியை சேர்ந்த மணிபாண்டி மகன் மணிபாரதி, பன்னீர்செல்வம் மகன் விவேக் ஆகிய 4 பேர் சேர்ந்து ஆட்டோ டிரைவர் கார்த்திக்கை படுகொலை செய்ததது தெரியவந்து.
இதில் உலகராஜா, கிருஷ்ணமூர்த்தி இருவரும் 10ஆம் வகுப்பு பெயிலாகி தனியார் டுட்டோரியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். மணிபாரதி மற்றும் விவேக் இருவரும் ஐ.டி.ஐ மாணவர்கள்.. இதனை தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் மாணவர்கள் 4 பேரும் மது அருந்திவிட்டு தகராறு செய்துள்ளனர். இதனை ஆட்டோ டிரைவர் கார்த்திக் கண்டித்துள்ளதார்.
இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் ஆட்டோ டிரைவரை வெட்டிபடுகொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 4 மாணவர்கள் சேர்ந்து ஆட்டோ டிரைவரை படுகொலை செய்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications