செங்கோட்டை அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை- 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

செங்கோட்டை கற்குடியில் ஆட்டோ டிரைவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: கொலை செய்யப்பட்டவரின் பெயர் ஹரிஹரன் என்பதாகும். கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளிகளுக்கு எதிராக ஹரிஹரன் புகார் வாக்கு மூலம் கொடுத்ததால் அவரை கொலை செய்து விட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடி கிராமத்தை சேர்ந்தவர் முப்புலி மகன் கருப்பசாமி ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 10.09.2015 ஆம் ஆண்டு தனது ஆட்டோவில் 5 பேரை ஏற்றிக் கொண்டு புளியரையை நோக்கி சென்று கொண்டு இருந்த போது, எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.

Auto driver hacked to death near Senkottai

இதில் டிரைவர் கருப்பசாமி,அடிவெட்டி,மகேஷ்,முருகன்,இசக்கி 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். லாரி டிரைவர் தப்பி ஓடினார். இந்த வழக்கில் கற்குடியை சார்ந்த வடகாசி மகன் ஹரிஹரன் என்பவர் புளியரை போலீசில் புகார் வாக்குமூலம் கொடுத்தார்.

இச்சம்பவம் தொடர்பாக புளியரை போலீசார் விசாரணை நடத்தியதில், லாரியை ஓட்டி வந்தவர் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், லாரியை மோதவிட்டு ஆட்டோவில் வந்தவர்களை கொலை செய்தது தெரியவந்தது.இந்த வழக்கில் 12பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் ஹரிஹரன் புகார் வாக்கு மூலம் கொடுத்ததால் அவரை கொலை செய்ய எதிரிகள் முடிவு செய்துள்ளனர். ஞாயிறன்று நள்ளிரவு 12மணியளவில் ஹரிஹரன் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டு முன்பு 6பேர் கொண்ட குமபல் வந்துள்ளது 3பேர் மட்டும் அவரது வீட்டுக்குள் நுழைந்து ஹரிஹரனை 3பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தலை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டி படு கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டது. அனைவரும் சட்டை அணியாமல் வந்து கொலையில் ஈடுபட்டதாக கொலையை பார்த்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த நெல்லைமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை நடத்தி கொலை செய்யப்பட்டஹரிஹரன் உடலை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ணைப்பி வைத்தார்.

கொலையை தொடர்ந்து கற்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு செங்கோட்டை ஆய்வாளர் பிரதாபன்,தென்காசி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் தலைமையில் போலீசார் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+