தேவியின் முகம் பார்க்க போனால் ராஜேந்திரன் முகம் தெரியுதே.. ஒரு திடுக் கொலை!
ஆட்டோடிரைவர் ஒருவரை கல்லை போட்டு கொலை செய்திருக்கிறர்கள்.
சென்னை: கொலையும் செய்வாள் மனைவி என்றார்கள்.
ஆனால் மனைவி, யாரை கொலை செய்வார் என்று தெளிவாக சொல்லாமலேயே நம் முன்னோர்கள் போய்ச் சேர்ந்துவிட்டனர்! அதற்கு இந்த குன்றத்தூர் சம்பவமே சாட்சி!
குன்றத்தூர் அருகே நந்தம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். 65 வயதான இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி. வயது 32. கட்டிட வேலைக்கு போய் வருவார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

தூங்கிய ராஜேந்திரன்
ராஜேந்திரனுக்கு தண்ணி அடிக்கும் பழக்கம் இருக்கிறது. பழக்கம் என்றால் சும்மா இல்லை... பட்டப்பகலிலேயே மட்டையாகி விழுந்து விடுவார். அப்படித்தான் நேற்று காலையிலேயே போதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது தேவி,உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றிருக்கிறார். கொஞ்ச நேரத்தில் ராஜேந்திரன் தூங்கிவிட்டார்.

தேவியின் அலறல்
இரவு வீட்டிற்கு வந்தார் தேவி. அப்போது ராஜேந்திரனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்துவிட்டனர். உடனடியாக போலீசுக்கும் தகவல் அளித்தனர். விரைந்து வந்த ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விஷயம் வந்தது
அதன்பிறகு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முதல் ஆளே தேவிதான்! வேறு யார் மீதும் போலீசாருக்கு சிறிதும் சந்தேகம் ஏற்படவேயில்லை. தேவியிடம்தான் விசாரணையை துவக்கினர். அப்போது விஷயம் ஒவ்வொன்றாக வெளியே வந்தது. எதிர்ப்பார்க்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லை... வழக்கம்போல, கேவலமான, கள்ளக்காதல் சமாச்சாரம்தான்!

வேலு எஸ்கேப்
தேவிக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுவுக்கும் இந்த தொடர்பு இருந்ததை ரொம்ப சீக்கிரத்திலேயே போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். இதையடுத்து, வேலுவை விசாரிக்க வீட்டிற்கு சென்றால் அங்கு அவர் எஸ்கேப். இருந்தாலும் குன்றத்தூர் போலீசார் விடவில்லையே... தீவிரமாக தேடி வேலுவை கைது செய்தனர். இப்போது வேலுவிடம் விசாரணை தொடங்கியது.

தேவியின் முகம்
ராஜேந்திரனை ஏன் கொலை செய்யப்பட்டார் தெரியுமா? ஆட்டோ ஓட்ட ராஜேந்திரன் போகாமல் எப்பவுமே வீட்டில் இருந்தாராம். போதையில் வீட்டிலேயே நாள் முழுதும் இருப்பதால், கள்ளக்காதலர்கள் சந்தித்து கொள்ள முடியவில்லையாம். வேலு எப்போது தேவியை சந்திக்க வீட்டிற்கு போனாலும் அது முடியாமல் போய்விட்டதாம். தேவியின் முகத்தை பார்க்க போனால் ராஜேந்திரன் முகம்தான் தெரியுமாம். அதனால் ராஜேந்திரனை தூங்கி கொண்டிருந்தபோது கல்லை போட்டு கொன்றதாக சொன்னார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications