தமிழகத்தில் இன்று ஆயுதபூஜை கொண்டாட்டம்.. பூஜை பொருட்களின் விற்பனை ஜரூர்!
Recommended Video

சென்னை: தமிழகத்தில் இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இதனால் பூஜை பொருட்களின் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.
தமிழகத்தில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி விழாக்கள் இன்று கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆயுதங்களை வைத்தும் மாணவர்கள் புத்தகங்களை வைத்தும் வழிப்படுவது வழக்கம்.

அதுபோல் அலுவலகங்களிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த நாளில் ஊழியர்களுக்கு பொரி, கடலை, பழங்கள், இனிப்புகள் ஆகியவை வழங்கப்படும். இதற்காக கடந்த ஒரு வாரமாக பொரி மூட்டை கடைகள் ஆங்காங்கே முளைத்துவிட்டன.
[ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைகள் செய்ய இன்று நல்ல நேரம் எப்போது தெரியுமா! ]
கல்வியில் சிறந்து விளங்குவதற்காக சரஸ்வதி பூஜையும் தொழில் நன்றாக நடக்க ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதற்காக பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை ஜரூராக உள்ளது. இதன் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் திருஷ்டிக்காக பூசணிக்காய்களும் வந்திறங்கியுள்ளன.
இதை வாங்க மக்கள் ஆங்காங்கே திரண்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுகளில் கூட்டம் அலைமோதுகிறது.
நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நாளை எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும் என்பதால் அந்த நாளில் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது, புதிய தொழில் தொடங்குவது, புதிய திரைப்படங்களுக்கு பூஜை போடுவது உள்ளிட்டவை நடைபெறும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications