‘ஆசை’ படஸ்டைலில், பாலீதின் பையால் சென்னை டாக்டர் தற்கொலை
சென்னை: தனது முகத்தைப் பாலிதீன் கவரால் மூடி தற்கொலை செய்து கொண்டுள்ளார் சென்னையைச் சேர்ந்த ஆயுர்வேதா மருத்துவர் ஒருவர்.
சென்னை, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 23 வயது ஆயுர்வேத மருத்துவர் சுதர்சன். தாயுடன் வசித்து வரும் இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். கடந்த சனிக்கிழமையன்று தனது வீட்டில் தனிமையில் இருந்த சுதர்சன் பிளாஸ்டிக் பையால் முகத்தை இறுக்கக் கட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பணி முடிந்து வீடு திரும்பிய அவரது அம்மா, மகனின் கோலம் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், சுதர்சன் தற்கொலை செய்து கொள்வற்கு முன்னர் தொலைபேசியில் பேசியது தெரிய வந்துள்ளது.
அதனடிப்படையில், காதலில் ஏற்பட்ட தோல்வி கூட சுதர்சனின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சுதர்சனின் தாயார் அளித்த தகவலின் படி, சுதர்சனை மேற்படிப்பிற்காக கேரளா செல்ல அவரது தாய் வற்புறுத்தியதாகவும், ஆனால், தாயாரை தனிமையில் விட்டுச் செல்ல மனமில்லாமல் சுதர்சன் குழப்பத்தில் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
தனது தற்கொலை குறித்து சுதர்சன் கடிதம் எதுவும் எழுதி வைக்காததால், விசாரணையின் முடிவில் உண்மை தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications