விடுதியில் வசதியே இல்லை: மத்திய குழுவிடம் ஆயுர்வேத கல்லூரி மாணவிகள் புகார்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் உள்ள விடுதியில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்ற மாணவிகள் புகரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில், கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் புதிய மாணவர் சேர்க்கை நடைபெறும் முன்பு மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இதற்காக கல்லூரி தொடங்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் இருந்து மத்திய குழு நாகர்கோவில் வந்து ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து டாக்டர் ராஜாராம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிக்கு வந்தது. அவர்கள் கல்லூரியின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சோதனை கூடங்கள், மருந்து தயாரிக்கும் அறை, மாணவிகள் விடுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களை கல்லூரியின் முதல்வர் ராமகிருஷ்ணமாச்சாரியா ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்து சென்று அங்கு நடைபெறும் பணிகளை விளக்கினார்.
குழுவினர் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிக்கு சென்றபோது அங்கு தங்கியிருந்த மாணவிகள், தங்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறினர். மேலும் குடிநீர் வசதி சுத்தமாக இல்லை என்றும் கூறினர். இது பற்றி ஆய்வுக் குழுவினர் கல்லூரி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். மாணவியருக்கு உரிய வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர். பின்னர் கல்லூரியில் நடைபெறும் கட்டுமான பணிகளையும் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மத்திய ஆய்வு குழுவிடம் மாணவிகள் திடீரென புகார் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications