விவசாயிகளை முதலில் காப்பாற்றுங்கள்.. பின்னர் மாடுகளை காப்பாற்றலாம்.. அய்யாக்கண்ணு காட்டம்
மத்திய அரசு முதலில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயி அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
மதுரை: மத்திய அரசு முதலில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், பின்னர் விவசாயிகளே மாடுகளை காப்பாற்றிக் கொள்வார்கள் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள மத்திய அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும். இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாது என்று கூறியுள்ளது.

மத்திய அரசின் திடீர் உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயங்களை காப்பாற்ற மறுக்கும் மத்திய அரசு மாடுகளை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறது என்று கூறினார்.
மேலும் நதிகளை இணைக்க கோரி ஜூலை மாதம் ஆயிரம் விவசாயிகளை திரட்டி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறினார். விவசாயிகளுக்கே உணவு இல்லை என்கிற போது மாடுகளை எப்படி காப்பாற்ற முடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர், மத்திய அரசு முதலில் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், பின்னர் விவசாயிகளே மாடுகளை காப்பாற்றிக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications