மதுரையில் அழகிரி- அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் சந்திப்பு.. பரபரப்பு!
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
Recommended Video

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து அவரது தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும், அதிமுக கட்சியில் முக்கிய உறுப்பினராகவும் உள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு. இவரது தாயார் ஒச்சம்மாள் தனது 95 வயதில் கடந்த 30ஆம் தேதி காலமானார்.
மதுரையில் வசித்து வந்த இவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

அமைச்சர் வீட்டில் அழகிரி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு இன்று நேரில் சென்றார்.

உற்றுநோக்கப்பட்ட சந்திப்பு
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். இந்த சந்திப்பு உற்றுநோக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

நீங்கள் எதிர்பார்த்தது இல்லை
அதற்கு பதிலளித்த அழகிரி, அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மறைவுக்கு துக்கம் விசாரிக்க வந்தேன் அவ்வளவுதான். நீங்கள் எதிர்பார்த்தது போன்று வேறு ஒன்றும் இல்லை என்று தனது பாணியில் அழகிரி பதிலளித்தார்.

அழகிரியை புகழ்ந்த அமைச்சர்
அண்மையில் நடைபெற்ற அழகிரியின் பேரணி குறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அழகிரிக்கு வந்த கூட்டத்தை புகழ்ந்தார். கருணாநிதியின் நினைவஞ்சலி பேரணியில் அழகிரி மிகப்பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளார் என தெரிவித்தார்.

அமைச்சர் கருத்து
ஆயிரக்கணக்கானவர்களை திரட்டி கருணாநிதி மறைவுக்கு அமைதி பேரணியை நடத்தியது அழகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு இருப்பதை காட்டுகிறது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். தேர்தலில் அவருக்கு எவ்வளவு ஆதரவு என்பது தேர்தலின் போது தான் தெரியும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications