மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஆளுர் ஷா நவாஸ்க்கு கோபமாக பதிலளித்த தயாநிதி அழகிரி!

சுப்பிரமணிய சாமி தொடர்பான ஆளுர் ஷா நவாஸின் கேள்விக்கு அழகிரியின் மகன் துரை தயாநிதி கோபமாக பதிலளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுப்பிரமணிய சாமி தொடர்பான ஆளுர் ஷா நவாஸின் கேள்விக்கு அழகிரியின் மகன் துரை தயாநிதி கோபமாக பதிலளித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுகவில் நுழையவிருக்கும் அழகிரி இட்லி கடையை மட்டும் தான் வைக்கமுடியும் என்றார்.

Azhagiri son Durai Dhayanidhi Angrily answeree Aloor Sha Navas.

திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்றும் அவர் கூறியிருந்தார். சுப்பிரமணிய சாமியின் இந்த பேச்சு அழகிரி தரப்பினரை கொதிப்படைய செய்தது.

இந்நிலையில் சுப்பிரமணிய சாமியின் பேச்சு குறித்து டிவிட்டிய விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி ஆளுர் ஷா நவாஸ், கி வீரமணி எதிராக பொங்கிய துரை தயாநிதி சுப்பிரமணிய சாமிக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் ஆசிரியர் என்றால் பாய்வதும் ஆரியர் என்றால் பம்முவதும் ஏன் என கேட்டு சீண்டியிருந்தார் ஆளுர் ஷா நவாஸ். ஆளுர் ஷா நவாஸின் இந்த டிவிட்டுக்கு அழகிரியின் மகன் துரை தயாநிதி பதிலளித்துள்ளார்.

அதாவது மனநோயாளிகளுக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லை , அதுவே காரணம் என கோபமாக பதிலளித்துள்ளார் துரை தயாநிதி.

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி யாரையாவது சீண்டுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+