அமைச்சர் காலத்தில் பயன்படுத்திய பழைய லெட்டர் பேடை எடுத்து "தேங்க்ஸ்" சொன்ன அழகிரி!
மதுரை: தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய, வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. ஆனால் அந்த கடிதம் எழுதிய லெட்டர் பேட்தான் கொஞ்சம் சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.
மு.க.அழகிரியின் 64 வது பிறந்தநாள் இன்று மதுரை குலுங்க குலுங்க கொண்டாடப்பட்டது. இத்தனை ஆண்டுகள் இருந்ததை விட இந்த ஆண்டு உற்சாகம் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், பால்குடம், முளைப்பாறி, நலத்திட்ட உதவிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.

இத்தனை ஆண்டுகாலமாய் தான் வளர்த்துவிட்ட தன்னால் வளர்ந்த 75 சதவிகிதம் பேர் தன்னை விட்டு ஒதுங்கினாலும் 25 சதவிகிதம் பேர் அழகிரியின் பிறந்தநாளை உற்சாகமாகவே கொண்டாடினர்.
அவர்களுக்கு அழகிரி நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.
எனது உதிரத்திலும், உணர்விலும் அன்றும் இன்றும் இரண்டறக் கலந்துள்ள அன்பு உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்கள் என்றென்றும் நலமோடும் புகழோடும் வாழ, வளர எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
என்னுடைய சோதனைக்காலங்களிலும் கூட எனக்கு நங்கூரமாய் இன்றும் நட்போடு இருப்போரை நினைத்து பெருமைப்படுகிறேன். என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அழகிரி கூறியுள்ளார்.

அவர் நன்றி சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் அவர் கடிதம் எழுதிய லெட்டர்பேடுதான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக இருந்தபோது உபயோகப்படுத்திய லெட்டர் பேடினை பயன்படுத்தி நன்றி கடிதம் எழுதியுள்ளார் என்பதுதான் அவருக்கு சிக்கல்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications