காதலனை போட்டுத் தள்ள ரூ. 1 லட்சம் சேர்த்தேன்... கணவரைக் கொன்று கைதான பெண் பரபரப்பு தகவல்!
சென்னை: கள்ளக்காதலனுடன் சேர்த்து கணவரை பிளாஸ்டிக் கவரால் மூச்சுத் திணறடித்துக் கொலை செய்து, அதை டிவி ரியாலிட்டி ஷோவில் வாய் தவறிச் சொல்லி மாட்டிக் கொண்டு கைதான பெண், தனது கள்ளக்காதலன் தனக்கு துரோகம் செய்து விட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்ததால் அவரைக் கொல்ல திட்டமிட்டு வந்ததாகவும், இதற்காக ரூ. 1 லட்சம்வரை பணம் சேர்த்து வைத்திருந்ததாகவும் கூறிய தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பணம் சேர்த்து வைத்த விவகாரத்தையும் அப்பெண் அந்த ரியாலிட்டி ஷோவில்தான் தெரிவித்தார்.
தற்போது கைதாகியுள்ள இப்பெண் போலீஸாரிடமும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

பேபிகலா...
அந்தப் பெண்ணின் பெயர் பேபிகலா. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் பெயர் ராதாகிருஷ்ணன்.

கெளரி சங்கருடன் கள்ளக்காதல்
இவருக்கும் கெளரிசங்கர் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் மூண்டது. கணவர் இல்லாத நேரங்களில் வீட்டுக்கே அழைத்து வந்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.

கணவர் வீட்டிலேயே இருந்ததால் சங்கடம்
ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் குடிக்கு அடிமையானார். வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்தார். இது கள்ளக்காதலர்களுக்கு இடையூறாக மாறியது. இதனால் ராமகிருஷ்ணனைப் போட்டுத் தள்ளத் தீர்மானித்தார் கெளரிசங்கர்.

2010ல் கொலை
இதையடுத்து 2010ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பேபிகலாவும் கெளரிசங்கரும் சேர்ந்து பிளாஸ்டிக் பையால் ராதாகிருஷ்ணன் முகத்தை மூடி மூச்சுத் திணறடித்துக் கொலை செய்தனர். பின்னர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடினார் பேபிகலா.

கள்ளக்காதலனின் துரோகம்
இந்த நிலையில் கள்ளக்காதலன் கெளரிசங்கர், பேபிகலாவை விட்டு விட்டு வேறு பெண்களுடன் பழக ஆரம்பித்தார். திருமணத்திற்கும் தயாராகி விட்டார். இதனால் கோபமடைந்த பேபிகலா, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை அணுகினார்.

டிவியில் அம்பலப்படுத்தினார்
அந்த ஷோவில் தனது கதையைச் சொல்லிப் புலம்பினார். மேலும் கெளரிசங்கர் தனது கணவரைக் கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார்.

தானும் மாட்டினார்
ஆனால் இந்த புகாரின்போது வாய் தவறி தானும் கொலைக்கு உடந்தையாக இருந்ததைக் கூறி விட்டார் பேபிகலா. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராமகிருஷ்ணனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பேபிகலாவைப் போலீஸார் கைது செய்தனர்.

கள்ளக்காதலனைப் போட்டுத் தள்ளத் திட்டம்
இந்த ஷோவின்போது பேபிகலா பேசுகையில் பல திடுக்கிடும் தகவல்களையும் தெரிவித்தார். அதாவது கெளரிசங்கர் தன்னை விட்டு விட்டு வேறு திருமணம் செய்யவிருந்ததாக கூறிய அவர் கெளரிசங்கரைக் கொலை செய்ய தான் திட்டமிட்டதையும் ஒப்புக் கொண்டார்.

ரூ. 1 லட்சம் சேர்த்து வைத்தார்
தனது கணவரைக் கொன்றதால் தான் மிகுந்த கோபமடைந்ததாகவும், இதனால் கெளரிசங்கரைக் கொலை செய்ய தான் திட்டமிட்டு வந்ததாகவும், இதற்காகே ரூ. 1 லட்சம் வரை பணம் சேர்து வைத்ததாகவும் அவர் கூறினார். ஆனால் இதெல்லாம் அவரும் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதை அவரே ஒப்புக கொள்வதற்கு முன்பு கூறியதாகும்.
கணவர் கொலை, கள்ளக்காதலனைக் கொல்லத் திட்டம் என்று பேபிகலா அடுத்தடுத்து கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவரை தற்போது போலீஸார் தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications