அதெல்லாம் சரி, அப்பா பெயர் எங்கே?... ராதாவுக்கு கிடுக்கிப் பிடி போடும் பைசூல் வக்கீல்!

பைசூல் தன்னுடன் 6 வருடம் குடும்பம் நடத்தினார். பணத்தை மோசடி செய்து விட்டார். திருமணம் செய்ய மறுத்து விட்டார் என்று கூறி பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரக் கோரி போலீஸில் புகார் கொடுத்தார் நடிகை ராதா.
மேலும் இதுதொடர்பாக சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டிலும் அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இன்று இந்த வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பைசூல் தரப்பில் வழக்கறிஞர்கள் கலைச்செல்வன், மார்க்கரெட் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணையின்போது ராதா தரப்பு வக்கீல் வாதிடுகையில், பைசூலுக்கு ஜாமீன் தரக்கூடாது. பைசூலால் ராதா கர்ப்பமாகியுள்ளார். அவரது கட்டாயத்தால் அபார்ஷன் செய்து விட்டார். அதுதொடர்பான ஆதாரங்கள் இதோ என்று ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
இதையடுத்து குறுக்கிட்ட பைசூல் தரப்பு, அதெல்லாம் சரிதான். அதில் அப்பா பெயரே இல்லையே. பைசூல்தான் தந்தை என்றால் அப்பெயர் இருக்க வேண்டுமே என்று கிடுக்கிப்பிடி போட்டனர்.
இதே கேள்வியை நீதிபதி அரசு வக்கீலிடம் எழுப்பி விளக்கச் சொன்னார். அதற்கு அரசு வழக்கறிஞர், திருமணம் செய்துகொண்டு ஏமாற்றியதாக சொல்ல முடியாது. கற்பழிப்பு வழக்காகவும் எடுத்துக்கொள்ள முடியாது.
இப்போதைக்கு பணம் வாங்கியுள்ளதாகவும், அதை திருப்பி கொடுக்க வேண்டும் என்றே விவகாரம் உள்ளது. தீர விசாரித்த பிறகுதான் அரசு நடவடிக்கை எடுக்கும். முகாந்திரம் இருந்தால் வழக்கு தொடருவோம். பைசூலை கைது செய்யலாம். ஆகவே, அதுவரை பைசூலை கைது செய்ய அவசியமில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications