நீட் தேர்வு முடிவு வெளியிட உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
மதுரை: நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடைபெறவில்லை எனத் தொடர்ந்த வழக்கில் நீட் தேர்வு முடிகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது.
மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறுவதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேசிய தகுதிகாண் தேர்வு எனப்படும் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதனால் ஏழை, கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்று தமிழக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. மேலும் சட்டசபையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதுகுறித்து ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் அன்று சிபிஎஸ்இ விதித்த கெடுபிடிகளால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.
வரும் ஜூன் 8-ஆம் தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கேட்கப்பட்ட நீட் தேர்வு கேள்விகள் ஒரே மாதிரியாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
நீதிபதி மகாதேவன் கூறுகையில், இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஎஸ்இ வாரியம் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிலையில், திருச்சியை சேர்ந்த மலர்விழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடுத்தார்.
அதில் அவர் நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வில் இடம்பெற்ற கேள்விகள் ஒரே மாதிரியானதாக இல்லை என்றும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரினார். பொதுவான வினாத்தாள் வைத்து தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அந்த வழக்கானது இன்று மதுரை கிளை நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக சிபிஎஸ்இ, மத்திய அரசு ஆகியன ஜூன் 7-ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications