வெள்ளம் குறைந்ததால் தலையணையில் குளிக்க அனுமதி... சுற்றுலா பயணிகள் குஷி
களக்காடு: களக்காடு தலையணையில் வெள்ளம் குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. இங்கு குளியல் நடத்த தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த மூன்று தினங்களாக களக்காடு பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் தலையணையில் கட்டுகடங்காத வெள்ளம் வந்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் தலையணைக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

கடந்த 7ம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமுலுக்கு வந்தது. இந்த தடை உத்தரவு தெரியாமல் வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் அருகே பகுதியில் குளித்து சென்றனர். இந்த நிலையில் மழை படிப்படியாக குறைந்ததால் வெள்ளமும் குறைந்தது. இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மாலை விலக்கி கொள்ளப்பட்டது.
மகிழ்ச்சி...
இதை தொடர்ந்து தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
தடுப்புக் கயிறு...
தடுப்பணை அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர்.
கவனம் தேவை...
தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அங்கு பாராஸ்டர் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
எச்சரிக்கை...
மேலும் சுற்றுலா பயணிகள் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், மது பாட்டில்கள் கொண்டு செல்ல கூடாது என சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications