திருச்சி: மன உளைச்சலில் 5வயது மகளை கொன்று தனியார் வங்கி மேலாளர் தற்கொலை
திருச்சியில் சிண்டிகேட் வங்கி மேலாளர் ஒருவர் மகளை கொன்று தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Recommended Video

திருச்சி: பலருக்கும் கடன் கொடுத்து மன உளைச்சலில் இருந்த வங்கி மேலாளர் ஒருவர் 5 வயது மகளைக் கொன்று தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்து அவரது மனைவியும் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் ராமசுப்பிரமணியன் என்பதாகும். இவர் திருச்சி சிண்டிகேட் வங்கியின் எஸ்ஆர்சி கிளை மேலாளராக இருக்கிறார். அவரது மனைவி ஆவுடையம்மாள் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்கிறார்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே கணேஷ் தர்ஷன் அபார்ட்மென்டில் வசித்து வந்த ராமசுப்ரமணியன், நேற்று வியாழக்கிழமை வழக்கம்போல மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றார். அப்போது யூகேஜி படிக்கும் தனது 5 வயது மகள் ஆருத்ராவையும் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மனைவி ஆவுடையம்மாள் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தபோது, கணவரும், குழந்தையும் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது அலறல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வந்து இருவர் உடலையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருவரும் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆவுடையம்மாள் மருத்துவமனை முன்பு வாகனங்கள் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த கோட்டை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமசுப்பிரமணியன் சில நிறுவனங்களுக்கு வரம்புமீறி கடன் கொடுத்ததாகவும், அதனால் அண்மைக் காலமாக மன குழப்பத்தில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications