ஜெ.வை விட பெரும் பணக்காரர் சசிகலாதானாம்... வங்கி அதிகாரி தகவலால் பரபரப்பு

ஜெயலலிதாவை விட சசிகலாதான் பெரும் பணக்காரர் என்று வங்கி அதிகாரி அளித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜெயலலிதா வங்கி கணக்கை காட்டிலும் சசிகலாவின் வங்கிக் கணக்கில் அதிக பணம்

    சென்னை: ஜெயலலிதா வங்கி கணக்கை காட்டிலும் சசிகலாவின் வங்கிக் கணக்கில் அதிக பணம் இருப்பதாக வங்கியின் முன்னாள் அதிகாரி மகாலட்சுமி தெரிவித்தார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் டிசம்பர் 5-ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

    இதுதொடர்பாக மக்கள் சந்தேகம் கிளப்பியதை அடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியது.

    ஜெ.வுக்கு சிகிச்சை

    ஜெ.வுக்கு சிகிச்சை

    இந்த விசாரணை கமிஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது நண்பர்கள், அரசு முன்னாள் இன்னாள் அதிகாரிகள் என விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆறுமுகசாமி ஆணையம்

    ஆறுமுகசாமி ஆணையம்

    இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அது போல் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுபவர்களிடம் சசி வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்து வருகிறார்.

    இனிப்பு சாப்பிட்டது

    இனிப்பு சாப்பிட்டது

    இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால் இன்று ஆறுமுகசாமி கமிஷனில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இனிப்பு சாப்பிட்டது உண்மைதான் என்றார்.

    3 இனிப்புகள்

    3 இனிப்புகள்

    அதுபோல் அரவக்குறிச்சி , தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளின் சட்டசபை இடைத் தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் 3 வகையான இனிப்புகளை அவர் சாப்பிட்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஸ்டெல்லா மேரிஸ் ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமி ஆஜரானார்.

    வங்கிக் கணக்கில் எவ்வளவு

    வங்கிக் கணக்கில் எவ்வளவு

    அப்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தியதில், ஆணையத்திடம் தெரிவித்த தகவல்களை தான் குறுக்கு விசாரணையிலும் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். இளவரசி மகன் விவேக் கல்வி கடன் 2012-ஆம் ஆண்டே முடிக்கப்பட்டுவிட்டதாகவும்,
    ஜெயலலிதா வங்கிக் கணக்கில் வெறும் ரூ. 9 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் , சசிகலா கணக்கில் ரூ. 3 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் கடந்த சில வருடங்களாக எந்தவித பரிவர்தனைகளும் மேற்கொள்ளபடவில்லை என்றும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+