வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பணமில்லாமல் மூடப்பட்ட ஏடிஎம்கள்... பொதுமக்கள் அவதி
சென்னை: நேற்று நடைபெற்ற வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைகள் பெரிதும் பாதிக்கப் பட்டன. பணமில்லாமல் பல ஏ.டி.எம்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
சம்பள திருத்தத்தை மேற்கொள்வது, வங்கித் துறை சீர்த்திருத்தங்களை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வங்கி ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களின் கோரிக்கைகள் குறித்து வங்கி ஊழியர்களின் சங்கங்களுக்கும், வங்கி அமைப்புகளுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால் தோல்வி அடைந்தது. இதையடுத்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்த வங்கி ஊழியர்கள் சங்கங்கள் முடிவு செய்தன.
அதன்படி, நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் பண பரிவர்த்தனைகள் பாதிக்கப் படும் அபாயம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில ஏடிஎம்களில் பணம் தீர்ந்து போன நிலையில், அதனை நிரப்ப ஆள் இல்லாமல் போனதால் அவை தற்காலிகமாக மூடி வைக்கப் பட்டன. இதனால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பலர் அவசரத் தேவைகளுக்கு வங்கியிலும், ஏடிஎம்களிலும் பணம் எடுக்க முடியாமல் திண்டாடினர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications