இன்று வங்கிகளுக்குப் போக முடியாது.. 10 நாட்களுக்குப் பின் "பிரேக்"
10 நாள் ஓய்வில்லாத வேலைக்குப் பின்னர் இன்று வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை: கடந்த 10 நாட்களாக பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது, பணம் வழங்குவது என பிசியாக இருந்த வங்கிகள் இன்று ஒரு நாள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு ஒரு பிரேக் தர வேண்டும் என்பதற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அடுத்த நாள் முதல் இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 9ம் தேதி முதல் இடைவிடாமல் வங்கிகள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன.

அனல் பறந்த வங்கிகள்
நாடு முழுவதும் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் கட்டி ஏறியது. ரூபாய் நோட்டுக்களை மாற்றுவது, புதிய நோட்டுக்களைப் பெறுவது என மக்களும் சரி, வங்கி ஊழியர்களும் சரி கடுமையாக பிசியாக இருந்தனர். பல இடங்களில் இதுதொடர்பாக வாதப் பிரதிவாதங்களும் மோதல்களும் கூட அரங்கேறின.

சனி ஞாயிறுகளிலும்
மேலும் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட வங்கிகள் திறந்து செயல்பட்டன. இதேபோல ஏடிஎம் மையங்களிலும் பணத்தை நிரப்பநிரப்ப அது காலியாகி வந்தது. இருந்தாலும் விடாமல் வங்கி ஊழியர்கள் அதையும் நிரப்பி வருகின்றனர்.

இன்று ஓய்வு
இந்த நிலையில் இன்று ஒரு நாள் வங்கி ஊழியர்களுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் மத்தியில் பெரும் மன அழுத்தம், வேலைப்பளு இருப்பதாலும் சில இடங்களில் வங்கி ஊழியர்கள் வேலைப்பளு காரணமாக இறந்ததாலும் இந்த விடுமுறை தரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
இருப்பினும் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலமாகவே அறிவித்துள்ளன.
நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு பிரஷ்ஷா வாங்க!












Click it and Unblock the Notifications