பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்: தமிழக அரசு
சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்று கூறி சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்ததார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் வரையறுத்த 8 பொது இடங்களில் புகையிலை விற்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.
கல்வி நிலையங்கள், மருத்துவமனை, ரயில் நிலையங்கள் அருகே புகையிலை விற்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், இவ்விகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றி வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவுச் செய்த நீதிபதி கிருபாகரன், அடுத்த 4 வாரங்களில் மாநில சுகாதாரத்துறை, காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட பிரிவினர், பல்வேறு தொண்டு நிறுவனத்தின் ஆலோசனைகள் மூலம் புகையிலைப் பொருட்களை பொது இடத்தில் பயன்படுத்தாமல் தடுப்பதற்கான விளக்கங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications