'பேனர் கார்னர்..': ஜெ. அதிகாரமிட கும்பிடும் ராஜபக்சே, வாய்மூடி கேட்கும் ஒபாமா!
Subscribe to Oneindia Tamil

அதிமுகவின் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் கோவை நகரின் 10 இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பேனர்களில் முதல்வர் ஜெயலலிதா அதிகாரத் தொனியில் ஒற்றை விரலை காட்டுகிறார்.
ஜெயலலிதா சொல்வதை அடக்க ஒடுக்கமாக கேட்பது போன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்பட 3 நாட்டு தலைவர்கள் பவ்யமாக தலை குனிந்து நிற்கிறார்கள்.
அதே சமயம் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவோ மண்டி இட்டு ஜெயலலிதாவை கும்பிடுவது போல் உள்ளது.
அந்த பேனரில் இப்படித்தான் பிரதமர் இருந்திட வேண்டும். நம் அம்மாவை தவிர வேறு யாரால் இது முடியும்? மக்களே சிந்திப்பீர்...!!! என்று எழுதப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications