வைரல் ஆன "பொண்டாட்டி"... வசீகரித்த கிருபா வர்கீஸ்!
சென்னை: சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 மாணவிகள் சேர்ந்து தயாரித்து வெளியிட்ட ஒரு வீடியோ செமையான வைரலாக மாறி யூடியூபை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் அந்த வீடியோவில் நடித்துள்ள மாணவி கிருபா வர்கீஸ்தான் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளார்.
பி அவர் பொண்டாட்டி என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்த வீடியோவை அனுகிருபா இளங்கோ, கிருபா வர்கீஸ், அஸ்மிதா கோஷ் ஆகிய மூன்று மாணவிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
பிரபலமான கார்லி ரே ஜெஸ்பனின் கால் மி மேபி என்ற பாடலை தழுவி இந்த பி அவர் பொண்டாட்டி பாடலை உருவாக்கியுள்ளனர் இந்த மாணவிகள்.

நிபந்தனைகள்...
நமது நாட்டில் உள்ள திருமண முறைகள், பெண் பார்ப்போர் போடும் நிபந்தனைகள், கேட்கும் வரதட்சணை, நாட்டு நடப்பு எல்லாவற்றையும் கலந்து கட்டி இந்த வீடியோவை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

மாமியாராக...
இந்தப் பாடலுக்கு கிருபா வர்கீஸ் நடித்துள்ளார். அச்சு அசல் இந்திய மாமியார் போல இதில் அவர் அல்டாப்பாக காட்சி தருகிறார். ஒரு மருமகளிடம் தான் எதிர்பார்ப்பது என்னென்ன என்பதை விவரிக்கும் பாடலுக்கு அவர் அப்படியே மாமியாராக மாறிப் போய் நடித்துக் கலக்கியுள்ளார்.

வட்டமான சப்பாத்தி...
உயரமான, கலரான பெண்ணாக இருக்க வேண்டும். வேலை பார்க்க வேண்டும். எனது மகன் அம்மா செல்லம். அதற்கேற்ற மாதிரி பெண் வேண்டும். பார்ட் டைம் வலை பார்த்தால் போதும். குழந்தை பெற்றுத் தர வேண்டியது கட்டாயம் என்று நீளும் நிபந்தனைகளின் இறுதியில இதற்கு சம்மதிப்போர் நீங்களே உங்களது கைப்பட தயாரித்த வட்ட வடிவமான சப்பாத்தியை சாம்பிளாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு கூறி கலகலப்பாக போகிறது இந்த கேலி சித்திரம்.

வைரல்...
இந்த மூன்று மாணவிகளும் இறுதியாண்டில் படித்து வருபவர்கள் ஆவர். இந்த வீடியோவை இதுவரை 5,38,007 பேர் பார்த்துள்ளனர்.
கிருபா வர்கீஸ்...
இதில் நடித்துள்ள கிருபா வர்கீஸுக்கு சொந்த ஊர் கேரளா. ஆனாலும் செட்டி நாட்டு மாமியாராக இதில் அவர் கலக்கலான தோற்றத்தில் வருகிறார். அவரது முக பாவனைகள், பேசும் விதம், அல்டாப் தோற்றம் என எல்லாமே கலக்கலாக உள்ளது.

பெங்களூரில் வளர்ந்தவர்...
கேரளத்துப் பெண்ணான கிருபா பெங்களூரில் வளர்ந்தவர். இவரது தந்தை ரெஜி வர்கீஸ் பிசியோதெரப்பிஸ்ட் ஆவார். தாயார ரோசி வர்கீஸ். ஜெட் ஏர்வேஸில் பணியாற்றுகிறார். கடந்த 3 வருடமாக தெஸ்பியன் கிளப் என்ற கிளப்பில் நாடகங்களில் நடித்து வருகிறாராம் கிருபா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications