வெயிலை வெறுக்காதீங்க... அனுபவிங்க பாஸ்! #summerheat
வெயில் பட்டையை கிளப்புகிறது. வெயிலை வெறுக்காதீர்கள். நன்றாக அனுபவியுங்கள், ரசியுங்கள் என்று வாட்ஸ்அப்பில் தகவல் உலா வருகிறது. டுவிட்டர்வாசிகள் வெயிலை எப்படி பார்க்கிறார்கள் பார்க்கலாம்.
சென்னை: வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி வருகிறோம். மழையை விட வெயிலைத்தான் நாம் அதிகம் அனுபவிக்கிறோம். அதுவும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை விளாசித் தள்ளும் வெயிலை சமாளிப்பது கடுமையான விசயம். இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் வெயில்தான் பேசு பொருளாக உள்ளது. சகட்டு மேனிக்கு 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகிறது.
சதமடித்த வெயிலைப்பற்றித்தான் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர். அக்னி நட்சத்திரத்தில் வெயில் வறுத்தெடுக்கும் என்று சொன்னால், இப்ப மட்டும் வெயில் கம்மியாவா அடிக்கிறது என்று கேட்கின்றனர்.
வெயிலுக்கு இதமாக கவிதையும் பாடுகின்றனர் சிலர். வெயிலில் வறுபடும் வலைஞர்களின் சில பதிவுகளை நீங்களும் படிங்க வாசகர்களே!
|
இப்படி ஆயிருவோமா?
ப்ரிட்ஜிக்குள் நாய் அமர்வது போல ஜில்லான இடத்தை தேடி அலைகிறது மனதும் உடம்பும்
என்ன வித்தியாசம்
மத்த ஊர் வெயிலுக்கும் சென்னை வெயிலுக்கும் என்ன வித்தியாசம்..? மத்த ஊர் வெயில்ல போயிட்டு வந்தா நம்ம மொகம் கலர் ஸ்பேடான ஆதார் போடோ மாதிரி ஆகிடும் ...சென்னை வெயில்ன்னா நம்ம மொகம் மொத்தமா பழைய ஓட்டர் ஐடி மாதிரி கருப்பா ஆகிடும்... என்று பதிவிட்டுள்ளார் இந்த வலைஞர்.
|
செட்டிங்ஸ்ல மாத்துங்க ப்ளீஸ்
மை டியர் சூரியன், உங்க செட்டிங்ஸ்ல போய் ஏன் கொஞ்சம் வெளிச்சத்தை குறைங்க, ரொம்ப சுடுதுல்ல என்று கெஞ்சுகிறார் ஒருவர்.
|
அக்னி நட்சத்திரம் வேறயா?
இதுக்கு அப்புறம் தான் அக்னி நட்சத்திரம் வேற வரப்போகுதாம். வந்தா நமக்கு என்ன?.....அதுக்குள்ள தான் நம்மளே போய்ருவோம் போல இருக்கே.....வெயில்! பட்டைய கிளப்புதே என்று புலம்புகிறார் ஒரு வலைஞர்
|
என்னா ஒரு தத்துவம்
பங்குனி வெயிலுக்கு பதமான ஒரு தத்துவம். வெயில் அதிகமான ஜூஸ் குடிக்கலாம்... ஜூஸ் அதிகமான மழையை குடிக்க முடியுமா? என்று கேட்கிறார் ஒருவர்.
|
வெள்ளமும், பள்ளமும்
மழை வந்தா வெள்ளம் வருது, வெயில் வந்தா பள்ளம் வருது !! என்னா ஒரு முரண்பாடு என்று புலம்புகிறார் ஒரு சென்னைவாசி.
|
வெயிலுக்கு ஜில்லான கவிதை
வெயில் நிலவோ
மழையில் குடையோ
குளிரில் அனலோ
பகலில் நிலவோ
வெற்றியின் படியோ
எனக்கு என்று அவளோ
உயிரின் மூச்சோ
மழைக்கு மட்டும்தான் கவிதை சொல்வோமா? வெயிலுக்கும் சொல்வோமே என்கிறார் ஒருவர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications