பீப் பாடல்: எப்.ஐ.ஆர். - ஐ ரத்து செய்ய கோரி நடிகர் சிம்பு உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் விவகாரத்தில் கோவை போலீசார் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். தன் மீதான எப்ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் கடந்த வாரம் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில், பெண்களை கேவலமாகவும், ஆபாசமாகவும் தனது இசை ஆல்பத்தில் பாடிய நடிகர் சிம்பு, அந்தப் பாடலுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.

இதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்பு வீட்டை அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து மாதர் சங்கத்தினர் பல்வேறு போராட்டாங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், கோவை மாதர் சங்கத்தினர் நடிகர் சிம்பு மற்றும் அனிருத் மீது கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பி உள்ளனர். இதற்கிடையே மற்றொரு பக்கம் சென்னை போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை தற்போது சேகரித்து வருகின்றனராம்.
இந்நிலையில் பீப் பாடல் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக, 3 பிரிவுகளின் கீழ் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆர். - ஐ ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சிம்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3-க்கு ஒத்திவைத்தது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications