சென்னையில் கொளுத்தும் வெயில்: டாஸ்மாக்கில் 'ஜில்' பீர் விற்பனை ஜோர்
சென்னை: சென்னையில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குளிரூட்டப்பட் பீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் வெயில் தினமும் சென்ச்சுரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. ஏற்கனவே வெப்பத்திற்கு பெயர் போன சென்னையில் வெயில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
வெயிலை தாங்க முடியாமல் மக்கள் பகல் வேளையில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

கத்திரி வெயில்
கத்திரி வெயில் காலம் துவங்கும் முன்பே வெயிலை தாங்க முடியவில்லை. மே மாதம் வந்து அக்னி நட்சத்திரம் துவங்கினால் என்ன ஆகப் போகிறோமோ என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மோர், இளநீர்
சூட்டை தணிக்க மக்கள் மோர், இளநீர், வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, கூழ் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கி உட்கொள்கிறார்கள். ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் ஆகியவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

பீர்
சூரியன் உக்கிரத்தில் இருந்து வருவதையொட்டி சென்னையில் உள்ள 'குடி'மகன்களின் கவனம் குளு குளுவென குளிரூட்டப்பட்ட பீர் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் குளிரூட்டப்பட்ட பீர் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

டாஸ்மாக்
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை சூடு பிடித்துள்ளது. அதே சமயம் ரம், விஸ்கி ஆகியவற்றின் விற்பனை மந்தமாகியுள்ளது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதம் பீர் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications