கோஷ்டிகள் இணைப்பு பேச்சுக்கு முன்னர் பதவி பேரம் குறித்து பேசுவதுதான் பண்பாடா? ஓபிஎஸ் 'சுளீர்'
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்னர் பதவி பேரம் குறித்து பேசுவது பண்பாடாக இருக்காது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்னர் முதல்வர் பதவி, பொதுச் செயலாளர் பதவி, அமைச்சர் பதவி என பேரம் பேசுவது பண்பாடாக இருக்காது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக இரண்டாக பிளந்து தினகரன் தலைமையில் அதிமுக அம்மா கட்சி என்றும் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி என்று ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. இரட்டை இலையை மீட்பதற்காக இரு அணிகளும் ஒன்றிணைவது என்று முடிவு செய்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு நிபந்தனைகள்
எடப்பாடி கோஷ்டியுடன் பேச்சுவார்த்தைக்கு முன்னர் சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை விரட்டியடிக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நிபந்தனைகள் ஒப்புக் கொண்டால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர். அதை ஏற்று தினகரனை மட்டும் கட்சியிலிருந்து எடப்பாடி கோஷ்டியினர் ஓரங்கட்டினர்.

துடுக்கான கருத்துகள்
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக எடப்பாடி அணியினர் நக்கல், நையாண்டி பேசினர். இதனால் கடுப்பான ஓபிஎஸ் அணியினர், கோபத்தின் உச்சத்திற்கே சென்று, தங்களை கேலி பேசுவதை பார்த்தால் எடப்பாடி அணியினருக்கு பேச்சுவார்த்தைக்கு விருப்பம் இல்லை என்றால் தனித்து செயல்பட்டுக் கொள்ளுங்கள் என்று எச்சரித்தனர்.

யார் முன்னெடுப்பது
என்னதான் அமைச்சர் ஜெயகுமார் பேச்சுவார்த்தைக்கு தயார், அவர்கள் அழைக்கும்போது பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்றாலும் இரு அணிகளில் யார் முதலில் அழைப்பது என்று கௌரவம் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் எடப்பாடி சனி, ஞாயிறுகளில் டெல்லி சென்றதால் ஒரு வழியாக பேச்சுவார்த்தை ரகசிய இடத்தில் திங்கள்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தினகரன் கோஷ்டி முட்டுக்கட்டை போட ஓபிஎஸ் அணியினரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் முனுசாமி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு எஸ்எம்எஸ் அனுப்பியும் அவர்கள் பதில் தரவில்லை என்று எடப்பாடி அணியின் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

பண்பாடாக இருக்காது
இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தி எடப்பாடி அணியினருக்கு அதிர்ச்சி கொடுக்கலாம் என்ற வியூகத்துடன் விழாவை நடத்த திருவான்மியூரில் இடம் தேர்வு செய்ய வந்த ஓ.பன்னீர் செல்வம், பேச்சுவார்த்தை நடப்பதற்கு முன்னரே பதவிகள் குறித்து பேசுவது பண்பாடாக இருக்காது என்று தெரிவித்தார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications