Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஜினியின் தமிழக அரசியல் பிரவேசம்.. பெங்களூர் நிறுவனம்தான் "ஸ்கெட்ச்" போடுதாமே??

ரஜினிகாந்த் தொடங்கும் கட்சிக்கு பெங்களூரு நிறுவனம் ஆலோசனைகளை வழங்குவதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் புதிய கட்சிக்கான ஆலோசனைகளை வழங்கும் பணி பெங்களூரு நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ரஜினிகாந்த் ரசிகர்களுடனான சந்திப்பின் போது பேசிய அரசியல் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் தமிழரே அல்ல.. அவர் கர்நாடகாவில் அரசியல் செய்யப்பட்டும் என்ற முழக்கங்கள் எழுந்தன.

மராட்டியர் ரஜினி

மராட்டியர் ரஜினி

இன்னொரு பக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு மராட்டியர்... அவர் வீட்டில் வீரசிவாஜி படம் இருக்கிறது என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி சர்ட்டிபிகேட் கொடுத்தார். இந்த அக்கப்போர்களுக்கு பதில் தரும் வகையில் நான் பச்சைத் தமிழன் என கொந்தளித்தார் ரஜினிகாந்த்.

கர்நாடகத்தில் எதிர்ப்பு

கர்நாடகத்தில் எதிர்ப்பு

இந்த பச்சைத் தமிழன் பேச்சுக்கு கர்நாடகா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே மும்பையில் காலா படபிடிப்புக்காக ரஜினி சென்றுள்ளார்.

பெங்களூரு நிறுவனம்

பெங்களூரு நிறுவனம்

இந்நிலையில் ரஜினியின் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்க பெங்களூரு நிறுவனம் ஒன்று அமர்த்தப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம்தான் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஒழுங்குபடுத்த உள்ளதாம்.

தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பு

தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பு

பச்சைத் தமிழன் என பறைசாற்றும் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்ககூட கர்நாடகா நிறுவனம்தான் கிடைத்ததா? என தமிழ்த் தேசியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த நிறுவனம்தான் ரஜினியின் செல்வாக்கை எப்படியெல்லாம் ஓட்டாக மாற்றலாம் என்பது குறித்தும் ஐடியா கொடுக்குமாம்.

இது என்ன டிசைனில் வெடிக்குமோ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+