எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது.. மோடி அரசை வீழ்த்த நேரம் வந்துவிட்டது.. ராகுல் பேச்சு
மோடி தலைமையிலான அரசை வீழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
சென்னை: எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது ஒன்று சேர்ந்துள்ளது, மோடி தலைமையிலான அரசை வீழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக இந்தியா முழுக்க இன்று நாடு முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் காரணமாக பல மாநிலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் தலைமையில் இந்தியா முழுக்க முழு அடைப்பு போரட்டம் நடத்தப்படுகிறது. இதனால் டெல்லியில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் பேரணி நடத்தினார்கள்.
ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ஆயிரக்கணக்கானோர் நடைபயணம் செய்தனர்.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி பேரணியில் முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. இதில் ராம்லீலா மைதானத்தில் நடந்த ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார்.
அதில், வார்த்தை தவறிவிட்டார் பிரதமர் மோடி. மக்கள் பிரச்சனையில் மோடி அமைதியாக இருக்கிறார். அமைதியாக இருப்பது மட்டுமே அவருடைய வேலையாக மாறிவிட்டது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி மோடி பேசவில்லை.விவசாயிகளின் கஷ்டம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து வாய் திறக்கவில்லை.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதலபாதாளத்தில் உள்ளது. மோடி இந்தியாவிற்கு ஒன்றுமே செய்யவில்லை. ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்களை ஏமாற்றிவிட்டார்.
எதிர்க்கட்சிகள் எல்லாம் இப்போது ஒன்று சேர்ந்துள்ளது. மோடி தலைமையிலான அரசை வீழ்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications